எஸ்பிபி கொரோனா தொற்றிலிருந்து மீண்டார்: கிரிக்கெட் மேட்ச் பார்க்கிறார்.. மகன் சரண் மகிழ்ச்சி தகவல்..

Advertisement

பின்னணி பாடகர் எஸ்பி பால சுப்பிரமணியம் கடந்த மாதம் தொடக்கத்தில் கொரோனோ வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அடுத்த சில நாட்களில் உடல்நிலை மோசமாகி சுயநினைவு இழந்தார். இதையடுத்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு உயிர்காக்கும் வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகளின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. சர்வதேச டாக்டர்களிடம் வீடியோ கான்பிரன்சிங் மூலம் மருத்துவனை டாக்டர்கள் கலந்தாலோசித்து எஸ்பிபிக்கு சிகிச்சை அளித்தனர்.

மேலும் எஸ்பிபி குணம் ஆக வேண்டி திரைத்துறையினர், ரசிகர்கள் உலகம் முழுவதிலும் இருந்து அவருக்காகப் பிரார்த்தனை செய்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே எஸ்பிபி உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும் 95 சதவீதம் அவரது உடல்நிலை தேறி இருக்கிறது. சுயநினைவுடன் இருக்கிறார் என அவரது மகன் எஸ்பிபி சரண் தெரிவித்தார். மேலும் வரும் திங்கட்கிழமை எஸ்பிபி பற்றி ஒரு நல்ல செய்தி வீடியோவில் குறிப்பிட்டிருந்தார்.இந்நிலையில் இன்று திங்கட்கிழமை மகிழ்ச்சி செய்தி பகிர்ந்திருக்கிறார் சரண். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:
என் அப்பா எஸ்பிபிக்கு வெண்ட்டிலேட்டர் இன்று அகற்றப்படும் என்று எதிர்பார்த்தோம் ஆனால் இன்னும் சில நாட்கள் அவருக்கு அந்த சிகிச்சை தொடர்கிறது. மகிழ்ச்சியான விஷயம் என்ன வென்றால் அப்பாவுக்கு கொரோனா தொற்று நெகடிவ் (கோவிட் 19 நெகடிவ்) ஆகி இருக்கிறது.

இதற்கு முன் நெகடிவா பாசிடிவா என்பது பிரச்சனை இல்லை நுரையீரல் சீராக வேண்டும் என்று நான் குறிப்பிட்டிருந்தேன், தற்போது நுரையீரல் விரைந்து குணம் ஆகி வருகிறது.
இதற்கிடையில் சமீபத்தில் எனது அம்மா, அப்பா திருமண நாள் மருத்துவமனையில் கொண்டாடினோம். அப்பா தற்போது ஐபேடில் கிரிக்கெட், டென்னிஸ் பார்த்து ரசிக்கிறார். ஐபிஎல் சீசன் தொடங்குவதிலும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். அவர் மலர்ச்சியுடன் இருக்கிறார். திட்டமிட்ட படி பிசியோதெரபியும் தரப்படுகிறது. உங்களுடைய அன்பு ஆதரவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு சரண் கூறி உள்ளார்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>