இந்த 3 விஷயங்கள் இல்லாமல் என்னால் வாழ முடியாது பிரபல நடிகை அதிரடி

by Nishanth, Sep 8, 2020, 17:54 PM IST

வாழ்க்கையில் மூன்று விஷயங்கள் இல்லாமல் என்னால் மட்டுமல்ல, யாராலும் வாழமுடியாது என்று பிரபல மலையாள நடிகை ஸ்வேதா மேனன் கூறியுள்ளார்.


மலையாள சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஸ்வேதா மேனன். இவர் மலையாளம் மட்டுமில்லாமல் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் உள்பட ஏராளமான மொழிகளில் நடித்துள்ளார். மிகவும் தைரியசாலியான நடிகை என்ற பெயர் பெற்ற இவர் காமசூத்ரா காண்டம் விளம்பரத்தில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அடிக்கடி ஏதாவது சர்ச்சையில் சிக்குவது இவரது வழக்கமாகும்.


கடந்த 2004ம் ஆண்டு தேசியக் கொடியை அவமதித்ததாக இவர் மீது புகார் கூறப்பட்டது. தொடர்ந்து 2011ல் கேரளாவை சேர்ந்த ஒரு ஊக்க மருந்து நிறுவனம் தங்களது விளம்பரத்திற்கு ஸ்வேதா மேனனின் ஒரு கவர்ச்சியான புகைப்படத்தை பயன்படுத்தியது. இது குறித்து அவர் போலீசில் புகார் புகார் செய்தார். இதையடுத்து அந்த நிறுவனத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.


இதன்பின்னர் மலையாளத்தில் இவர் நடித்து வெளியான 'களிமண்' என்ற படத்தில் தனது சொந்த பிரசவக் காட்சியை படம் பிடிக்க சம்மதித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் பின்னர் 2010ம் ஆண்டு ஆலப்புழாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஒரு காங்கிரஸ் பிரமுகர் இவரிடம் சில்மிஷம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.


இந்நிலையில் ஒரு மலையாள தொலைக்காட்சிக்கு ஸ்வேதா மேனன் பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியது: என்னுடைய வாழ்க்கையில் மூன்று முக்கிய விஷயங்கள் இல்லாமல் என்னால் வாழ முடியாது. அந்த மூன்று விஷயம் என்னவென்றால், குடும்பம், ஆரோக்கியம் பணம் ஆகியவை தான். என்னுடைய வீடு, தாய், குழந்தை, கணவர் இவை அனைத்தும் அந்த மூன்றில் முதலிடத்தை பெறும்.


பணம் இல்லாமல் என்னால் வாழ முடியாது. என்னால் மட்டுமல்ல யாராலும் வாழ முடியாது. பணம் இல்லாமலும் வாழ முடியும் என்று சிலர் கூறுவார்கள், அதெல்லாம் சும்மா.... மூன்றாவதாக உடல் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும். இந்த மூன்றும் இருந்தால் மட்டுமே நமக்கு வாழ்க்கையில் நிம்மதி இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

READ MORE ABOUT :

More Cinema News