கற்றாழை பயன்படுத்துவதால் பக்கவிளைவுகள் உண்டாகுமா??வாங்க பாக்கலாம்..

sideeffects of aloveragel in tamil

by Logeswari, Sep 8, 2020, 17:51 PM IST

கற்றாழை உண்பதால் உடல் ஆரோக்கியம் மேம்படுகிறது.கற்றாழையை முகத்தில் தடவுவதால் முகம் பொலிவு,மென்மை பெறுகிறது.இதனை அளவுக்கு மீறி பயன்படுத்தினால் பக்கவிளைவுகள் ஏற்படும் என்று நிபுணர்கள் ஆராய்ச்சியில் கூறியுள்ளனர்.கற்றாழையை அதிகம் பயன்படுத்துவதால் முகத்தில் அலர்ஜி.கண்கள் சிவத்தல்,தோல் தடுத்தல் போன்ற நோய்கள் ஏற்படுகின்றது.கற்றாழையை உண்பதால் இரத்ததில் உள்ள சர்க்கரையின் அளவை சீர் செய்கிறது.சரி வாங்க கற்றாழை பயன்படுத்துவதால் என்ன பக்கவிளைவுகள் ஏற்படும் என்பதை பார்க்கலாம்...

கற்றாழையின் நன்மைகள்:-

கற்றாழையை அளவோடு உண்பதால் உடம்பில் உள்ள அழுக்கு செல்களை அழித்து புது செல்களை உற்பத்திசெய்கிறது.இரத்ததில் உள்ள சர்க்கரையின் அளவை சீர் செய்கிறது,மலசிக்களை சரி செய்கிறது.முகத்தில் தடவுவதால் முகம் பொலிவு,மென்மை அடைகின்றது மற்றும் கறும்புள்ளிகளை போக்குகிறது.

கற்றாழையின் பாதிப்புகள்:-

கற்றாழையை அதிகம் பயன்படுத்துவதால் அதில் இருக்கும் லேடெக்ஸ் என்ற திரவியம் பலரின் உடம்பில் எரிச்சல்,வயிற்று பிடிப்புகள் மற்றும் பொட்டாசியத்தை குறைத்தல் என பல வியாதிக்களை உண்டாக்குகிறது.சிலருக்கு கற்றாழையின் ஜேல் தங்களின் சருமத்தில் பட்டாலே அலர்ஜி ஏற்படும் மற்றும் மலச்சிக்கல் ஏற்படுத்தும்.

சிலருக்கு கற்றாழையில் உள்ள நறுமணம் ஒத்துக்காமல் குமட்டல்,வாந்தி போன்றவற்றை இடம்பெறுகிறது.கருவை சுமக்கும் பெண்கள் கற்றாழையின் சாறை அறவே நீக்க வேண்டும்.அதில் இருக்கும் எரிச்சல் குணம் பிரசவத்தில் சிக்கலை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதனால் கற்றாழையை அளவோடு பயன்படுத்தி மகிழுங்கள்..”அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு”

You'r reading கற்றாழை பயன்படுத்துவதால் பக்கவிளைவுகள் உண்டாகுமா??வாங்க பாக்கலாம்.. Originally posted on The Subeditor Tamil

More Aval News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை