காபி பிரியர்களே...உஷார்!! காபி குடிப்பதால் முகப்பரு வருமாம்...

coffee is the main reason for pimples

by Logeswari, Sep 8, 2020, 17:42 PM IST

எல்லோரும் எந்த உணவு வழக்கம் உடலுக்கு ஆரோக்கியம் என்பதை உணராமல் பின்பற்றிவருகிறோம்..இதுவே நம் உடலை முக்கியமாக முகத்தை பாதிக்கிறது. எண்ணெய் பொருள்ககளை அதிகம் சாப்பிடுவதால் சருமத்தில் முகப்பரு உண்டாகும்.ஆனால் நாம் என்ன செய்கிறோம் எண்ணெயினால் தயாரிக்கப்பட்ட உணவை தான் வெளுத்து வாங்கி வருகிறோம்.. பெண்கள் தெளிவான முகத்தையே விரும்புவார்கள்.ஆனால் இப்பொழுது இருக்கும் வெப்பம்,காற்று மாசு ஆகியவற்றால் முகத்தில் பரு,கரும்புள்ளிகள் இடம்பெறுகிறது.சரி வாங்க காபி குடிப்பதால் என்ன சரும பிரச்சனைகள் உண்டாகிறது என்பதை பார்ப்போம்.

காபினால் முகம் பாதிக்கப்படுமா??என்று அனைவரின் மனதில் குழப்பம் இருக்கும். ஆமாங்க அதிக காபி குடித்தால் முகத்தில் பருக்கள் வரும்.பெரும்பாலும் ஹார்மோன் சமநிலையில் இல்லையென்றால் முகப்பரு உண்டாகும். இதனை சரி செய்ய அதிக காய்கறிகள், பழங்கள் உண்டாகவேண்டும். அப்பொழுது தான் தெளிவான சருமம் கிடைக்கும்.

தினமும் குடிக்கும் காபியின் அளவை குறைத்து கொள்ளுங்கள்.காபியில் உள்ள வேதி பொருள்கள் மன அழுத்தம் ஏற்படுகின்ற ஹார்மோனை அதிகமாக தூண்டிவிடுவதால் சருமத்தில் முகப்பரு உண்டாகிறது.

தோல்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் அதிக தண்ணீரை குடிக்க வேண்டும்.காபியை அதிகமாக குடித்தால் அடிக்கடி சிறுநீர் கழிப்போம்.இதனால் உடம்பில் உள்ள முழு தண்ணீரும் வெளியேறிவிடும்.இதனால் முகப்பரு உண்டாகிறது.

எனவே காபி தான் என்று அலட்சியமாய் இல்லாமல் பிடித்த காபியை அளவோடு பருகுங்கள்..

You'r reading காபி பிரியர்களே...உஷார்!! காபி குடிப்பதால் முகப்பரு வருமாம்... Originally posted on The Subeditor Tamil

More Health News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை