ஆரோக்கியமான ராகி அல்வா செய்வது எப்படி??

by Logeswari, Sep 8, 2020, 17:33 PM IST

மாலை நேரத்தில் ஸ்நாக்ஸ் செய்து குழந்தைகளை அசத்த நினைக்கும் தாய்மார்களுக்கு இந்த ரெசிபி உதவியாக இருக்கும்.இது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும நல்லது.எல்லோருக்கும் பிடித்த இனிப்பு வகை அல்வா.அதனை ராகியுடன் சேர்த்து ராகி அல்வா செய்வது எப்படி என்று பார்ப்போம்..

தேவையான பொருள்கள்:-

ராகி மாவு-1/2 கப்

நெய்-4 ஸ்பூன்

பால்-1 கப்

சர்க்கரை-1/4 கப்

ஏலக்காய பொடி-1/4 ஸ்பூன்

பாதாம்-6-7

பிஸ்தா-6-7

செய்முறை:-

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் நெய் சேர்த்து கொள்ள வேண்டும்.நெய் சூடான பிறகு அதில் ராகி மாவை சேர்த்து கட்டிகள் வராதவாறு நன்றாக கிளறி விட வேண்டும்.

பின்பு அதில் சர்க்கரை சேர்த்து உருகும் வரை மிதமான சூட்டில் கிளறவும்.

ஒரு பாத்திரத்தில் பாலை நன்றாக காய்ச்சி கொண்டு அந்த பாலினை ராகியில் சேர்த்து கெட்டியாக கலரவும்.

15 நிமிடம் கிளறியவாறு இருக்க வேண்டும்.பிறகு அதில் தேவையான அளவு ஏலக்காய் பொடியை தூவி அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும்.

கடைசியில் அலங்கரிக்க பாதாம்,பிஸ்தாவை வைத்து குழந்தைகளுக்கு பறிமாறுங்கள்..

சூடான,சுவையான ராகி அல்வா தயார்..

Get your business listed on our directory >>More Ruchi corner News

அதிகம் படித்தவை