நயன்தாராவின் திருமணம் இயக்குனர் விக்னேஷ் சிவனுடனா??ஆரவாரத்தில் இருக்கும் மக்கள்

by Logeswari, Sep 8, 2020, 18:14 PM IST

தமிழ் திரைப்படவுலகில் முதன்மை கதாநாயகியாக விளங்குபவர் "லேடி சூப்பர்ஸ்டார்"நயன்தாரா அவர்கள்.இவரது முதல் திரைப்படமான ஐயா திரைப்படத்தில் அறிமுகமாகி தற்போது தமிழ்நாட்டு இளைஞர்களின் மனதில் கவர்ச்சி கன்னி மற்றும் கனவு கன்னியாக விளங்கிவருகிறார்.இவர் முதன் முதலில் நடிகர் சிம்புவின் மீது காதல் வசப்பட்டார் ஆனால் அக்காதல் நிலைக்கவில்லை.

சில பல காரணங்களால் பிரியநேரிட்டது.இதன்பிறகு இவர் நடிப்பதில் ஈடுபட்டு மேல் மேலும் சினிமா துறையில் ஒரு அந்தஸ்தை நிலைநாட்டியுள்ளார்.சிம்புவிற்கு பிறகு டான்சர்பிரபுதேவாவுடன்காதல் வசப்பட்டு அக்காதலும் நிலைக்கவில்லை.இதன்பிறகு சில ஆண்டுகளாக "தனி ஒரு பெண்ணாக" போராடி "லேடி சிப்பர்ஸ்டார்" என்ற பெயரை தன் ரசிகர்களிடையே பெற்றுள்ளார்.

இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயற்றிய நானும் ரவுடி தான் என்ற திரைப்படத்தின் மூலம் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவர்க்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.எங்கே வெளிய சென்றாலும் இருவரும் ஜோடியாக செல்கின்றனர் அதுமட்டும் இல்லாமல் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை இணையதள பக்கத்தில் பகிர்கின்றனர்.சிறு தினங்களுக்கு முன்பு சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் திருக்கோவிலுக்கு நயந்தாரா தன் காதலனுடன் அம்மனை வழிபட சென்றுள்ளார். இவர்கள் வருவதனை அறிந்த கோவில் உரிமையாளர்கள் சிறந்த வரவேற்ப்பினை அளித்தனர்.

இதனிடையே கன்னியாக்குமரியில் உள்ள மக்கள் நயன்தாராவை காண்பதற்கும் அவருடன் புகைப்படம் எடுப்பதற்கும் ஏராளமான கூட்டங்கள் கூடின.இதனால் கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் சன்னதியில் கூட்டநெரிசலால் காணப்பட்டது.ஓணம் பண்டிகையில் கேரளா சேலை அணிந்து பண்டிகையை கொண்டாடும் விதத்தில் விக்னேஷ் சிவனுடன் புகைப்படங்கள் எடுத்து சமூக வலைத்தலங்களில் வெளியிட்டார்.இவர்கள் கூடிய விரைவில் திருமணம் செய்ய போவதாக இருந்த நிலையில் கொரோனாவால் இவர்களின் திருமணம் தள்ளிபோகிவிட்டது.இவர்களின் திருமண தேதி கூடிய சீக்கிரம் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.


More Cinema News

அதிகம் படித்தவை