போதை மருந்து விவகாரத்தில் கைதான பிரபல நடிகைகள் லாக் அப்பில் மோதல்.. பழைய தகராறு பிரச்சனையானது..

by Chandru, Sep 10, 2020, 11:40 AM IST

பெங்களூரில் போதை மருந்து விற்றதாக டிபி நடிகை அனிகா உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கன்னட நடிகர், நடிகைகளுக்குப் போதை மருந்து விற்றது தெரிந்தது. கைதானவர்கள் கொடுத்த தகவலின் பேரில் நடிகை ராகினி திவேதியை போதை மருந்து தடுப்பு போலீஸார் கைது செய்தனர். அவரிடம் அதிகாரிகள் தினமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போதை மருந்து பயன்படுத்தும் நடிகர். நடிகைகள் 15 பேர் பட்டியலைக் கன்னட இயக்குனர் இந்திரஜித் போதை மருந்து ர்ஹட்யோஉ போலீஸாரிடம் ஒப்படைத்தார். இந்த விவகாரத்தில் அரசு ஊழியர் ரவிசங்கர் என்பவர் கைது செய்யப்பட்டார். ராகினி திவேதியுடன் இவருக்கு நெருங்கிய தொடர்பு இருப்பது தெரியவந்தது. நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணிக்கும் போதை மருந்து விவகாரத்தில் தொடர்பு இருப்பதாகத் தகவல் வெளியாகி வந்தது அதை சஞ்சனா மறுத்தார். ஆனால் போதை மருந்து தடுப்பு பிரிவினர் சஞ்சனாவை கைது செய்தனர். கைதான ராகினி திவேதி, சஞ்சனா இருவரிடமும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராகினிக்கும் சஞ்சனாவுக்கும் ஏற்கனவே பிரச்சனை இருந்து வருகிறதாம். இது பழைய தகராறு. இருவரையும் லாக் அப்பில் போலீஸார் அடைத்துள்ளனர். அங்கு இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாம். விளக்கு அணைப்பது தொடர்பாகத் தகராறு ஏற்பட்டதால் அவர்களைப் பெண் போலீசார் சமாதானம் செய்ய முயல அவரை இருவரும் இந்த விஷயத்தில் தலையிடாதே என்று சொல்லித் துரத்தினர். ராகினி திவேதி அதிகாரிகள் விசாரணைக்கு சரியாக ஒத்துழைப்பு தருவதில்லை என்றும் கூறப்படுகிறது.

READ MORE ABOUT :

More Cinema News