நெட்டிசன்களுக்கு நீச்சல் டிரஸ் போட்டு பதிலடி கொடுத்த பிரபல நடிகை

by Nishanth, Sep 15, 2020, 12:02 PM IST

சமீபத்தில் நடிகை அனஷ்வரா ராஜன் கவர்ச்சி உடை அணிந்த போட்டோக்களை வெளியிட்டதால் ஆபாச தாக்குதல் நடத்திய நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரபல மலையாள நடிகை ரீமா கல்லிங்கல் நீச்சல் உடையணிந்த தன்னுடைய போட்டோவை வெளியிட்டுள்ளார்.
பிரபல மலையாள நடிகையான அனஷ்வரா ராஜன் கடந்த சில தினங்களுக்கு முன் தனது கவர்ச்சி படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். அந்தப் படங்கள் வெளியானதும் தான் தாமதம், நெட்டிசன்கள் அந்த நடிகை மீது ஆபாச தாக்குதல்களை தொடுக்க தொடங்கினர். உனக்கு வெட்கமில்லையா, மானமில்லையா, ரோசமில்லையா என்று கேட்டு சிலர் திட்டவும் செய்தனர்.


ஆனால் நடிகை அனஷ்வரா ராஜன் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மேலும் பல கவர்ச்சிப் படங்களை அவர் வெளியிட்டார். என்னை நினைத்து யாரும் கவலைப்பட தேவையில்லை, உங்களது வேலையை போய் பாருங்கள் என்று நெத்தியடியாக பதிலும் கொடுத்தார்.
இந்நிலையில் நடிகை அனஷ்வரா ராஜனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும் பிரபல ,மலையாள நடிகை ரீமா கல்லிங்கல் ஒரு அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். அதாவது கூலிங் கிளாசுடன் நீச்சல் உடையணிந்து கடற்கரையில் நிற்கும் ஒரு கவர்ச்சி போட்டோவை அவர் தனது இன்ஸ்டாகிராமில் இன்று பகிர்ந்துள்ளார்.
அந்த போட்டோவுடன் அவர் எழுதியிருந்த வாசகம் தான் அனைவரையும் கவர்ந்தது. அதிசயம், அதிசயம் பெண்களுக்கு கால்கள் இருக்கிறதாம் என்று அவர் கிண்டலாக குறிப்பிட்டுள்ளார். அனஷ்வரா ராஜன் தொடை தெரியும் வகையில் டிரஸ் போட்டிருந்ததால் அவரை பலர் திட்டி கருத்துக்களை தெரிவித்திருந்தனர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தான் நடிகை ரீமா கல்லிங்கல் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். ரீமா கல்லிங்கல் தமிழில் 'யுவன் யுவதி' உட்பட சில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது கணவர் ஆஷிக் அபு மலையாளத்தில் பிரபல டைரக்டர் ஆவார்.


More Cinema News

அதிகம் படித்தவை