பிரபல நடிகர் ஜாக்கி சான். இவரது பேரைக் கேட்டாலே சும்மா தியேட்டரே அலறும் அளவுக்கு ஆக்ஷன் காட்சிகள் இருக்கும். அந்தரத்திலிருந்து டைவ் அடிப்பது. விமானத்திலிருந்து குதிப்பது, ரயிலில் தாவுவது, நெருப்பில் குதித்து மோதுவது, மாடிக்கு மாடி தாவுவது என உயிரைத் துச்சமென எண்ணி இவர் செய்யும் சாகச சண்டைக் அதிர வைக்கும். காட்சிகளில் டூப் போடாமல் நடிப்பார் ஜாக்கி.துடிப்பான இளைமையில் செய்த சண்டைக் காட்சிகளை தற்போதும் செய்து வருகிறார். அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும் கணக்கிலடங்கா தளவுக்கு விபத்துக்களில் சிக்கி உடம்பு முழுக்க ஆபரேஷன் செய்யும் அளவுக்கு எலும்பு முறிவுகள் வாங்கி இருக்கிறார். உலகம் முழுவதும் ஜாக்கிக்கு ரசிகர்கள் கோடிக்கணக்கில் உள்ளனர்.
கடந்த ஆண்டில் அவர் வான்கார்ட் என்ற படத்தில் நடிக்கத் தொடங்கினார். அதனை இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருந்தனர். கொரோனா லாக்டவுனால் இந்த படமும் சிக்கியதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்தது. மீண்டும் படப்பிடிப்புகள் தற்போது தொடங்கி நடக்கிறது. இப்படத்தை ஸ்டேன்லி டோங் இயக்குகிறார். சீன நடிகை மியா முகி , யங் யங், ஐ லுன் உள்படப் பலர் இதில் நடிக்கின்றனர். தண்ணீரில் வேகமாகச் சீறிப் பாய்ந்து செல்லும் ஜெட் ஸ்கீ எனும் ஸ்கூட்டரில் தப்பிக்க ஜாக்கி ஹீரோயின் மியாவுடன் ஜெட் வேகத்தில் பறந்து செல்லும் காட்சி படமாக்கப்பட்டது. சிறிது தூரத்தில் ஒரு திருப்பத்தில் திரும்பியபோது அங்கிருந்த பாறையில் தண்ணீர் ஸ்கூட்டர் மோதியது ஜெட் ஸ்கீ தலைகுப்புற கவிழ்ந்தது. ஜாக்கியும் கியாவும் தூக்கி வீசப்பட்டனர். இருவரும் வெவ்வேறு திசையில் போய் விழுந்தார்கள். இந்த விபத்தைக் கண்டு அதிர்ந்த படக் குழு பதற்றம் அடைந்தது.
படப்பிடிப்பு பாதுகாப்பு குழுவினர் நீரில் குதித்து இருவரையும் தேடத்தொடங்கினர். ஒரு சில நிமிடங்களில் மியா மீட்கப்பட்டார். ஆனால் ஜாக்கியை நீண்ட நேரம் ஆகியும் காணாமல் தவித்தனர். கிட்டதட்டப் பட இயக்குனர் கதறி அழத் தொடங்கி விட்டார். பல நிமிடங்களுக்கு பிறகு ஜாக்கியைப் பாதுகாப்பு குழு மீட்டு தன்ணிரிலிருந்து அழைத்து வந்தது. அவரை கண்ட பிறகுதான் படக் குழுவுக்கே உயிர் வந்தது. தண்ணீருக்கடியில் சிக்கிய தனக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை கடவுள் சக்திதான் என்னைக் காப்பாற்றியது என்றார் ஜாக்கி. ஆனாலும் படப்பிடிப்பை ரத்து செய்யாமல் சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு அக்காட்சியைப் படமாக்கினர்.