கவர்ச்சி போட்டோ அனஷ்வரா ராஜனுக்கு ஆதரவாக மலையாள நடிகைகள் செய்த காரியம் என்ன தெரியுமா?

by Nishanth, Sep 15, 2020, 18:08 PM IST

இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி போட்டோ வெளியிட்டதற்காக நெட்டிசன்களின் ஆபாச தாக்குதலுக்கு இரையான அனஷ்வரா ராஜனுக்கு ஆதரவாக சில மலையாள நடிகைகள் தங்களது கால்களைக் காண்பித்து போட்டோக்களை வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.பிரபல மலையாள நடிகையான அனஷ்வரா ராஜன் கடந்த சில தினங்களுக்கு முன் தனது இன்ஸ்டாகிராமில் சில கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு இருந்தார். குட்டை டவுசர் அணிந்து கால்களைக் காண்பித்தபடி இருந்த அந்த போட்டோவுக்கு நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பும், ஆபாசக் கருத்துக்களையும் பதிவிட்டிருந்தனர். அதே வேளையில் நடிகைக்கு ஆதரவு தெரிவித்தும் பலர் கருத்து தெரிவித்திருந்தனர்.

நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அடுத்தநாளே அதே போன்ற வேறு டிரஸ் அணிந்த போட்டோக்களை அனஷ்வரா ராஜன் வெளியிட்டார். 'என்னைப் பற்றி நீங்கள் கவலைப்பட அவசியமில்லை' என்றும் அவர் கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் நடிகை அனஷ்வரா ராஜனுக்கு ஆதரவு குவிந்து வருகிறது. அவருக்கு ஆதரவு தெரிவித்து ஏற்கனவே நடிகை ரீமா கல்லிங்கல் நீச்சல் உடையுடன் கடற்கரையில் நிற்பது போன்ற படத்தை வெளியிட்டு இருந்தார்.

தற்போது மேலும் சில நடிகைகள் தங்களது கால்களைக் காண்பிக்கும் போட்டோக்களை வெளியிட்டுள்ளனர். நடிகைகள் அஹானா கிருஷ்ணா, அனார்கலி, கனி குஸ்ருதி ஆகியோர் தங்களது இன்ஸ்டாகிராமில் இன்று அதிரடியான பல புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். நடிகை கனி குஸ்ருதி தனது கால்களை காண்பித்தபடி தலைகீழாக நின்று யோகா செய்யும் ஒரு வீடியோவையும் வெளியிட்டு உள்ளார். நாளுக்கு நாள் நடிகை அனஷ்வரா ராஜனுக்கு ஆதரவு குவிந்து வருவதால் இனியும் பல நடிகைகள் இதுபோன்ற படங்களை விடுவார்களா எனச் சிலர் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

READ MORE ABOUT :

More Cinema News

அதிகம் படித்தவை