கெமிக்கல் இல்லாமல் வீட்டிலேயே இனிப்பான ஆப்பிள் ஜாம் செய்வது எப்படி??

by Logeswari, Sep 15, 2020, 18:01 PM IST

கடைகளில் விற்கப்படும் ஜாம் அதிக கெமிக்கலால் ஆனது.அதுவும் குழந்தைகள் கவர நிறைய செயற்கை பொருள்களை கொண்டு நிறத்தை உண்டாக்குகின்றனர். இப்பொழுது இருக்கும் சூழ்நிலையில் குழந்தைகள் வீட்டில் ஜாம் இருந்தால் மட்டுமே சாப்பிட விரும்புகின்றனர். சப்பாத்தி,ஃபரைடு ரைஸ் போன்ற உணவுக்கு கூட ஜாமை சேர்த்து சாப்பிடுவார்கள்.இது ஆப்பிள் பழம் மூலம் செய்வதால் இதிலிருந்து உடலுக்கு நார்சத்து போன்றவை கிடைக்கிறது.இயற்கையான முறையில் ஜாம் செய்வது எப்படி?? என்பதை பின் வருமாறு பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்:-

ஆப்பிள்- 2

சர்க்கரை-1 கப்

லெமன்-1/2 பழம்

தண்ணீர்-1/2 கப்

செய்முறை:-

முதலில் ஆப்பிளை தண்ணீரில் அலசி தோலை உரித்து கொள்ள வேண்டும்.

கடாயை அடுப்பில் வைத்து சூடான பிறகு,அதில் நறுக்கிய ஆப்பிளை சேர்த்து 5-10 நிமிடம் நன்கு வேக வைக்க வேண்டும்.

வேக வைத்த ஆப்பிளை மசித்து அதில் சர்க்கரையை சேர்த்து நன்றாக கிளறி சிறிது நேரம் கொதிக்க விடவும்.

15 நிமிடம் கழித்து கடைசியில் சிறிதளவு லெமன் சாறை சேர்த்து அடுப்பை அணைத்து விட வேண்டும்.

20 நிமிடத்தில் சுவையான குழந்தைகளுக்கு பிடித்த ஜாம் தயார்…

READ MORE ABOUT :

More Samayal recipes News

அதிகம் படித்தவை