உலகின் மிகப்பெரிய தளபதி ரசிகர் யார்? கேம் ஷோவில் பங்கேற்க வாய்ப்பு..

Advertisement

கோப்ரா, துக்ளக் தர்பார் போன்ற மெகா பட்ஜெட் படங்களின் தயாரிப்பாளர் செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ லலித் குமார் மற்றும் சினிமா சென்ட்ரல் யூடியூப் சேனல் இணைந்து நடத்தும் உலகின் மிகப்பெரிய தளபதி விஜய் ரசிகரைத் தேர்வு செய்யும் ஒரு மிகப்பெரிய ஆன்லைன் கேம் ஷோ பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இந்த கேம் ஷோ வரும் செப். 19, 2020 அன்று மாலை 6 மணிக்கு நேரலையில் நடைபெற உள்ளது. இந்த கேம் ஷோ தளபதி விஜய்யின் திரைப்படங்கள், அவரது விருப்பங்கள், பார்வைகள் மற்றும் பேச்சுக்கள் பற்றியது. விஜய்யை விரும்பும், அவரை பற்றிய எல்லா செய்திகளையும் சமூக வலைத் தளங்களில் ட்ரெண்ட் செய்யும் லட்சக் கணக்கான ரசிகர்களுக்காக இந்த கேம் ஷோ நடத்தப்படுகிறது.

செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ லலித் குமார் மற்றும் சினிமா சென்ட்ரல் யூடியூப் சேனலுக்காக இந்த கேம் ஷோவை ஜி. தனஞ்ஜெயன் தலைமையிலான CEAD ஃபிலிம் கன்சல்டன்ஸி குழு உருவாக்கியுள்ளது. இந்த நிகழ்வின் மூலம் லட்சக் கணக்கான விஜய் ரசிகர்களை ஒன்றிணைத்து, மகிழ்விக்கவும், தளபதி விஜய்யை பற்றி அனைத்தும் தெரிந்த உலகின் மிகப்பெரிய ஒரு விஜய் ரசிகரைத் தேர்வு செய்வதுமே இந்த கேம் ஷோவின் நோக்கம்.
இந்த கேம் ஷோ வரும் செப். 19 முதல் பத்து வாரங்களுக்கு (மொத்தம் 20 எபிசோட்கள்) ஒவ்வொரு வார இறுதியிலும் (சனி, ஞாயிறு) மாலை 6 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படும். இதன் தொடர்ச்சியாக வெற்றியாளரைத் தேர்ந்தெடுக்கக் கால் இறுதி, அரை இறுதி மற்றும் இறுதிச் சுற்றும் நடத்தப்படும்.

அனைவரும் தாங்கள் இருக்கும் இடத்திலிருந்து பங்கேற்கும் விதமாகப் பிரபல யூடியூப் சேனல்களான வலைப் பேச்சு மற்றும் சினிமா சென்ட்ரல் ஆகியவற்றில் இந்த கேம் ஷோ நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். கூடுதலாகத் தனஞ்சயன் மற்றும் சினிமா சென்ட்ரல் ஆகியோரது ட்விட்டர் ஐடிக்களிலும் அதே நேரத்தில் (மாலை 6 மணிக்கு) ஒளிபரப்பாகும். இந்த கேம் ஷோ தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதுமுள்ள லட்சக்கணக்கான விஜய் ரசிகர்களுக்காக நடத்தப்படுகிறது. இதில் அனைவரும் பங்கேற்கலாம். ஒவ்வொரு எபிசோடிலும் தொகுப்பாளர் பத்து கேள்விகளை கேட்பார். போட்டியாளர்கள் நிகழ்ச்சியின் முடிவில் அந்த கேள்விகளுக்கான பதிலைத் திரையில் தோன்றும் ஒரு வாட்ஸ்-அப் நம்பருக்கு ஒவ்வொரு எபிசோடின் முடிவிலும் அனுப்ப வேண்டும். நிகழ்ச்சியின் முடிவில் 10 கேள்விகளுக்குப் பதிலளிக்கப் போட்டியாளர்களுக்கு 5 நிமிடம் வழங்கப்படும், அதன் பிறகு அந்த நம்பருக்கு பதிலை அனுப்ப முடியாது.

ஒவ்வொரு எபிசோடிலும் வெற்றி பெறுபவர்கள் காலிறுதி, அரையிறுதியைத் தொடர்ந்து இறுதிச் சுற்றுக்கு செல்வார்கள். மொத்தம் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள பரிசுப் பொருட்களைப் பற்றிய தகவல்கள் கீழே: இந்த கேம் ஷோவில் கலந்து கொள்ள எந்தவித நுழைவுக் கட்டணமோ அல்லது நிபந்தனைகளோ கிடையாது. தளபதி விஜயை நேசிக்கும் யார் வேண்டு மானாலும் இந்த கேம் ஷோவில் பங்கேற்கலாம். அவர்கள் அளிக்கும் பதிலின் அடிப்படையில் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஒரு நபர் ஒரே ஒரு பதில் பதிவு மட்டுமே அனுப்ப இயலும். ஒரே நபர் பல பதிவுகளை அனுப்பினால் அனைத்து பதில்களும் நிராகரிக்கப்படும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் கேம் ஷோவின் நேரலையைப் பார்த்து எபிசோடின் முடிவில் கேட்கப்படும் பத்து கேள்விகளுக்கும் திரையில் தோன்றும் வாட்ஸ்-அப் நம்பருக்குப் பதில் அனுப்புவது மட்டுமே.

ஒவ்வொரு எபிசோட் வெற்றியாளர்களுக்கு கொடுக்கவிருக்கும் பரிசுகள்: முதல் 3 வெற்றியாளர்களுக்கு - 1 கிராம் தங்க காசு + ஒவ்வொருவருக்கும் தலா 5 மாஸ்டர் படத்தின் டிக்கெட்கள். அடுத்த 7 வெற்றியாளர்களுக்கு - ஒவ்வொருவருக்கும் தலா 5 மாஸ்டர் படத்தின் டிக்கெட்கள்.

இறுதிச் சுற்று வெற்றியாளர்களுக்கு:

முதல் பரிசு - பஜாஜ் பல்சர் 150 பைக் + உலகின் மிகப்பெரிய தளபதி விஜய் ரசிகர் ட்ரோஃபி.இரண்டாவது பரிசு - 8 கிராம் தங்க காசு + மாஸ்டர் படத்துக்கான டிக்கெட்கள் 5
மூன்றாவது பரிசு - 4 கிராம் தங்க காசு + ஒவ்வொருவருக்கும் தலா 5 மாஸ்டர் படத்தின் டிக்கெட்கள் கேம் ஷோவை பற்றிய அதிக தகவல்களை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக ஓர் அறிமுக நிகழ்ச்சி செப். 16 (புதன்கிழமை) இன்று மாலை 6 மணிக்கு இரண்டு யூ டியூப் சேனல்கள் (வலைப்பேச்சு மற்றும் சினிமா சென்ட்ரல்) மற்றும் ட்விட்டர் பக்கங்களில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படும். தளபதி விஜய் ரசிகர்களுக்கு இந்த கேம் ஷோ மிகவும் மகிழ்ச்சிகரமானதாகவும், ஈடுபாடு கொண்டதாகவும் இருக்கும். வெவ்வேறு சுற்றுகளில் 10 கேள்விகள் (திரைப்படங்களை பற்றிய கேள்விகள், பாடல்கள், வசனங்கள், ஆடியோ வெளியீட்டு பேச்சுகள் உள்ளிட்டவை) கேட்கப்படும்.

லட்சக்கணக்கான விஜய் ரசிகர்களை கொண்டாடவும், அவர்களுக்கு பல்வேறு பரிசுப் பொருட்களை வழங்கவும் நேரலையில் நடத்தப்படும் முதல் நிகழ்ச்சி இது. நீங்கள் உலகின் மிகப்பெரிய விஜய் ரசிகராக இருந்தால், இது உங்களுக்காக கேம் ஷோ. தவற விடாதீர்கள். கலந்து கொண்டு விஜய்யை பற்றி உங்களுக்கு தெரிந்தவற்றையும் அவர் மீது உங்களுக்கு இருக்கும் அன்பையும் காட்டுங்கள். பரிசுகளை வெல்லுங்கள்.தொடக்க நிகழ்ச்சியை செப். 16 (புதன் கிழமை) இன்று மாலை 6 மணிக்கு வலை பேச்சு மற்றும் சினிமா சென்ட்ரல் யூடியூப் சேனல்களில் பார்க்கவும். முதல் எபிசோட்: செப் 19 அன்று (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு மேற்கண்ட சேனல்களில் நேரலையாக ஒளிபரப்பாகும்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>