கால் அழகை காட்டும் போட்டோவை போட முடியுமா என கேட்ட ஒருவருக்கு பிரபல மலையாள நடிகை அன்னா பென் நெத்தியடி பதில் கொடுத்துள்ளார்.
கேரளாவில் இப்போது நடிகர், நடிகைகள் தங்களது கால் அழகை காட்டும் புகைப்படங்கள் தான் சமூக இணையதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் நடிகை அனஷ்வரா ராஜன் தன்னுடைய சில கவர்ச்சி படங்களை வெளியிட்டிருந்தார். குட்டை டவுசர் அணிந்து அவர் போஸ் கொடுத்திருந்த அந்த போட்டோக்கள் நிமிட நேரங்களில் வைரலானது. ஆனால் அவரை கண்டித்து மிக ஆபாசமான வகையில் ஏராளமானோர் கமெண்டுகளை தெரிவித்தனர்.
அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதே மாடலில் வேறு உடைகளை அணிந்து மீண்டும் பல போட்டோக்களை அவர் பகிர்ந்தார். இந்நிலையில் நடிகை அனஷ்வரா ராஜனுக்கு ஆதரவாக மலையாள நடிகர், நடிகைகள் களமிறங்கினர். நடிகைகள் ரீமா கல்லிங்கல், அஹானா கிருஷ்ணா, நஸ்ரியா நஸீம், ரஜிஷா விஜயன் உள்பட பலர் தங்களது கால் அழகை காட்டும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர்.
நடிகை அன்னா பென்னும் தன் பங்குக்கு சில கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டார். ஆனால் அந்தப் போட்டோவில் அவரது கால்கள் முழுமையாக தெரியாது. அதை பார்த்த ஒருவர், 'லெக் பீஸ் உள்ள படம் ஏதும் இல்லையா?'என்று கமெண்ட் செய்தார். உடனடியாக நடிகை அன்னா பென் அதற்கு பதிலடி கொடுக்கவும் தயங்கவில்லை. 'லெக் பீஸ் இல்லை, ஹேண்ட் பீஸ் தரவா?' என்று அவர் கமெண்ட் செய்தார். அன்னா பென்னின் இந்த பதிலடிக்கு ஏராளமானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதற்கிடையே நடிகை அனஷ்வரா ராஜனுக்கு ஆதரவாக மேலும் பல நடிகர், நடிகைகள் தங்களது கால் அழகை காட்டும் போட்டோக்களை பகிர்ந்த வண்ணம் உள்ளனர்.
கால் அழகை காட்ட கூறியவருக்கு பிரபல நடிகை கொடுத்த பதிலடி என்ன தெரியுமா?
Advertisement