முரளி நான் ரஜினிகாந்த் பேசறேன் உனக்கு ஒண்ணுமாவாது கண்ணா. நா இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் இது தான் நம் தலைவர் .. ராகவா லாரன்ஸ் டிவிட்டரில் நெகிழ்ச்சி..

by Chandru, Sep 18, 2020, 18:53 PM IST

சூப்பர் ரஜினிகாந்த் ரசிகர் தர்ஷன் என்கிற முரளி பெயரில் வந்த ஒரு டிவிட்டர் மெசேஜை சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரசிகர்கள் நேற்று முதல் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.
அதில், ரஜினிகாந்த் தலைவா, என் இறுதி ஆசை. 2021 தேர்தலில் வெற்றி பெற்று தமிழ மக்களுக்கு மிகச் சிறந்த தலைவனாகவும், தந்தை மற்றும் ஆன்மீக குருவாகவும் வீர நடைபோட்டு அடித்தட்டு கிராம மக்களின் தனிநபர் வருமானம் 25கே என்ற நிலை உருவாக்கிக் கொடு. உன்னை அரியணையில் ஏற்ற பாடுபடாமல் போகிறேனே என்ற வருத்தம்.இவ்வாறு சில வாரங்களுக்கு முன் பதிவிட்டிருந்தார் தர்ஷன்.

பின்னர் கொரோனவிலிருந்து குணம் அடைந்ததாக வெளியிட்ட புதிய மெசேஜில் கூறியிருப்பதாவது:ரஜினிகாந்த் ஆசிர்வாதம் கிடைத்தது. அதிசயம் நடந்தது. அற்புதம் நிகழ்ந்தது. கொரோனா நெகடிவ் வந்தது. தலைவர் காவலர்களின் பிரார்த்தனையால் எனது கிட்னியும் சரி ஆகி மீண்டும் பழைய நிலைக்கு வருவேன். உங்கள் பிரார்த்தனைக்கு நன்றி.இவ்வாறு 2வது மெசேஜில் கூறி உள்ளார்.ரஜினி ரசிகர் தர்ஷன் என்ற முரளியின் இந்த டிவிட் மெசேஜைதான் ரசிகர்கள் நெட்டில் டிரெண்டிங் செய்தனர்.

தனது ரசிகனுக்கு உடல் நிலை சரியில்லை என்பதை அறிந்த ரஜினி காந்த் அவருக்காக, முரளி நான் ரஜினிகாந்த் பேசறேன் உனக்கு ஒண்ணுமாவாது கண்ணா. இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் என்று வெளியிட்டிருந்த ஆடியே பதிவு ரசிகர்களிடையே பிரபலமாகி வருகிறது. அதைப் பற்றி ரஜினியின் ரசிகரான ராகவா லாரன்ஸ் குறிப்பிட்டு வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் நெகிழ்ந்திருக்கிறார். அதில்,இது தான் நம் தலைவர் தனது ரசிகர் எப்பொழுதெல்லாம் துயரத்தில் இருக்கிறார்களோ அப்பொழுதெல்லாம் அவர்கள் மீது அக்கறை காட்ட ஒரு போதும் தவறியதில்லை. நான் அந்த ஆடியோ பதிவை கேட்கும் போதெல்லாம் நேர்மறையான எண்ணங்கள் மற்றும் அன்பு அதிகரிக்கிறது. இப்போது அந்த ரசிகனுக்கு எவ்வளவு உற்சாகத்தைக் கொடுத்திருக்கும் என்பதை உணரமுடிகிறது...லவ் யூ தலைவா குருவே சரணம்” எனத் தெரிவித்திருக்கிறார்.

Get your business listed on our directory >> - https://directory.thesubeditor.com


READ MORE ABOUT :

More Cinema News

அதிகம் படித்தவை