தலைகீழாக தொங்கிய நடிகை தமிழில் வாரிசு நடிகர் விவகாரம் பற்றி நச் பதில்

Nepotisam in kollywood: actress Raiza opinion

by Chandru, Sep 20, 2020, 12:45 PM IST

இந்தி நடிகர் சுஷாந்த் சிக் தற்கொலை செய்துக்கொண்டு இறந்ததற்கு பாலிவுட்டில் வாரிசு நடிகர்கள் தொலைதான் காரணம் எனக் கூறப்பட்டது. அதுபோல் கோலிவுட்டிலும் வாரிசு நட்டிகர்களால் தொல்லை உள்ளதா என்று கேட்டதற்கு நடிகை ரைசா பதில் அளித்தார். அவர் கூறியதாவது:
பியா பிரேமா காதல் படத்தின் மூலம் தமிழில் ஹரீஷ் கல்யாணுடன் இணைந்தை நடித்து அறிமுகமானவர் ரைசா வில்சன். முதல் படம் வெளியாகி நீண்ட நாட்கள் ஆன நிலையில் அவர் நடித்த அடுத்தபடம் திரைக்கு வராதது ஏன் என்பதற்கும் கோலிவுட்டில் பாலிவுட் போல் வாரிசு நடிகர்களால் பிரச்னை உள்ளதா என்பதற்கு பதில் அளித்தார்.


அவர் கூறியதாவது:
திரைப்பட தாமதங்கள் என் கட்டுப்பாட்டில் இல்லாததால் எனக்கு எதுவும் தெரியாது. ஆலிஸ் படப்பிடிப்பைத் தொடங்கவில்லை, ஆனால் காதலிக்க யாருமில்லை மற்றும் எஃப்.ஐ.ஆர் ஆகிய படங்கள் திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடந்தது. ஆனால் கொரொனா தொற்றுநோய் நிகழ்ந்து படப்பிடிப்பு நின்றது. இந்த தாமதங்களால் நான் விரக்தியடைகிறேன். பியார் பிரேமா காதலுக்கு பிறகு குறிப்பிட்ட வகையான பாத்திரம்தான் கிடைக்கிறது அப்படத்தில் நான் ஹரிஷ் கல்யாணைக் சுற்றி வருவேன் பிறகு பிரிந்துவிடுவேன். அடுத்தடுத்து அதே போன்ற பாத்திரங்கள் வந்தன. எப்போதும் ஒரு உறவில் நிலையற்ற பெண்ணாக நடிக்க விரும்பவில்லை. மாறுபட்ட வேடங்கள், அர்த்தமுள்ள பாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன். ஆனால் அக்கதையை நான் வரையறுக்க முடியாது. நான் ஒரு வெளிநாட்டு பெண். ஆனால் பிக் பாஸ் தமிழ் மூலம் எனக்கு இங்கு புகழ் கிடைத்தது. நான் திரைப்படத்தில் அறிமுகமானபோது மக்கள் என்னை நன்கு அறிந்திருந்தார்கள்.


தமிழ் திரையுலகில் நேபாடிசம் அதாவது வாரிசு நடிகர்கள் ஒரு பிரச்சினை அல்ல. திறமைக்குதான் இங்கு மரியாதை. திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். லாக்டவுன் தட்ளர்வுகள் அறிவிக்கப்பட்டு திரைப்பட படப்பிடிப்புகள் முழு வீச்சில் தொடங்கி இருக்கிறது. சினிமா தியேட்டர்களும் மீண்டும் விரைவில் திறக்கப்படும் என நம்புகிறேன்.
தியேட்டர்கள் மூடப்பட்டு எனது திரைப்படங்கள் நிறுத்தப்பட்டதால் நான் வேலை யைப் செய்யாமல் உண்மையிலேயே கவலைப்பட்டேன். எனது வாழ்க்கையைப் பற்றி நான் யோசித்துக்கொண்டிருந்தபோது, தயாரிப்பாளர் சதீஷிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. விரைவில், கார்த்திக் எனக்கு தொலைபேசியில் ஒரு கதை சொன்னார். தி சேஸ் என்ற அந்த படத்தை நேசித்தேன், இரண்டு வாரங்களுக்குப் பிறகு படப்பிடிப்புக்குச் சென்றேன். நான் ஒரு பறவையியலாளராக நடிக்கிறேன். முழு படத்தையும் திண்டுக்கல்லுக்கு அருகிலுள்ள சிறுமலையில் படமாக்கினோம்.
இப்படத்தில் ஸ்டண்ட் காட்சி இருந்தது. ஸ்டன் மாஸ்டர் “திலீப் சுப்பராயண் அதுபற்றி நான் கவலைப்படவில்லை. என் ஸ்டண்ட் மிகவும் கடினமாக இல்லை. ஆனால் நாங்கள் ஒரு காட்டில் படப்பிடிப்பு நடத்தியதால் நான் நிறைய விழுந்தேன். நான் ஒரு மரத்திலிருந்து தலைகீழாக தொங்கும் காட்சி கூட நிறைய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்த பிறகு செய்யப்பட்டது, ”என்று அவர் தெரிவிக்கிறார்.
இவ்வாறு நடிகை ரைசா கூறினார்.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>More Cinema News

அதிகம் படித்தவை