வதந்திகளுக்கு முற்று புள்ளி வைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாமீண்டும் சீரியலில் நடிப்பாரா??

by Logeswari, Sep 20, 2020, 21:35 PM IST

தனியார் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.இது குடும்பத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டவை ஆகும்.இதில் மீனா என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கும் ஹேமா அவர்கள் சீரியலில் கர்ப்பமாக உள்ளது போல் கதை எழுந்தது.ஆனால் இறுதியில் இவர் தனது ரியல் வாழ்க்கையிலும் இறைவனில் அருளால் கர்ப்பம் அடைந்தார்.ஹேமாவின் குறும்புத்தனமான நடிப்புக்கு தமிழ் நாட்டில் எராளமான ரசிகர்கள் உள்ளனர்.

அவர் உண்மையாக கர்ப்பம் ஆனதால் கதைக்கும் பொருந்தியது.கொரோனா தாக்கத்தால் மீனா வீட்டில் அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சியை ஆடம்பரம் இல்லாமல் சாதாரணமாக நடத்தினர்.அதே போல் கடந்த வாரம் பாண்டியன் ஸ்டோர்ஸிளும் மீனாவிற்கு சிறப்பாக வளைகாப்பு நடத்தினர்.இது மக்களிடையே மிகுந்த வரவேற்ப்பை பெற்றது.

சில நாட்களுக்கு முன் சீரியலில் மீனாவிற்கு பெண் குழந்தை பிறந்தது போல் காண்பித்தனர்.ஒரிரு நாளில் ஹேமாவாகிய மீனாவிற்கு நிஜத்தில் ஆண் குழந்தை பிறந்ததாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் மீனா மீண்டும் நடிக்க வருவாரா என்ற கேள்வி பதில் அளிப்பது போல் ஹேமா ஒரு வீடியோவில் எல்லோருக்கும் பாசிட்டிவ்வான செய்தி காத்திருக்கிறது என்று தெரியப்படுத்தி உள்ளார்.இதனால் இன்னும் சில நாட்களில் பழைய மீனாவை பாண்டியன் ஸ்டோர்ஸில் எதிர் பார்க்கலாம்.

Get your business listed on our directory >>More Cinema News

அதிகம் படித்தவை