இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது, அவர் தற்கொலை செய்துகொண்டாரா? கொல்லப்பட்டு தூக்கில் தொங்க விடப்பாட்டாரா. அவரது மரணத்துக்கு என்ன காரணம் என்பது பற்றி போலீஸார், சிபிஐ, போதை மருந்து தடுப்பு அதிகாரிகள். அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொரோனா உலகெங்கும் பரவி இருக்கும் நிலையில் மக்களிடையே பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. திரையுலகிலும் பாதிப்புகள் அதிகம் உள்ளது. வருமானம் இல்லாமல் டிவி மற்றும் சினிமா நட்சத்திரங்கள் சிலர் தற்கொலை முடிவை எடுக்கின்றனர். ஜப்பான் மொழி பட நடிகை யூகோ டகூச்சி. 1998 ஆம் ஆண்டு ஜப்பானியத் திகில் படமான ரிங்கு என்ற படத்தின் மூலம் இவர் பிரபலமானார். இது ஹாலிவுட்டில் 2002 இல் த ரிங் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
மிஸ் ஷெர்லாக் உள்ளிட்ட பல தொலைக்காட்சித் தொடர்களிலும் படங்களிலும் யூகோ டகூச்சி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.பல்வேறு விருதுகள் பெற்ற யூகோ டகூச்சி தனது டோக்கியோ வீட்டில் தூக்கிட்டு இறந்து கிடந்தார். அவருக்கு வயது 40. அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் எதுவும் தெரியவில்லை. அவரும் தற்கொலைக் காரணம் குறித்து கடிதம் எதுவும் எழுதி வைக்கவில்லை.நடிகை தற்கொலை செய்து கொண்ட தகவல் அறிந்து வந்த போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர், இதுகுறித்து யூகோவின் கணவரிடம் நடிகர் கணவர் தைக்கி நகபயாஷி விசாரித்தபோது தங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை சந்தோஷமாகவே வாழ்ந்து வந்தோம் என்றார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
யூகோ டகூச்சியின் தாயாரும் தனது தனது உயிரை மாய்த்துக் கொண்டதாகச் சந்தேகிக்கிறார்கள் என்று ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2004 மற்றும் 2007க்கு இடையில் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள், டக்கூச்சி ஜப்பானிய அகாடமி விருதுகளில் சிறந்த நடிகை விருதினை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.