ஆடை அணியாமல் பிறந்த நாளை கொண்டாடி அதிர்ச்சி தந்த பிரபல நடிகை.. ஓஹோ இதுதான் பர்த்டே டிரஸ்ஸா? ரசிகர்கள் கலாய்..

by Chandru, Sep 28, 2020, 12:52 PM IST

இன்னிக்கு எனக்கு பிறந்தநாள் இந்த புதுடிரஸ் வாங்கினேன், நல்லா இருக்கா... என்று கேட்பதுதானே வழக்கம். அதுக்கு மற்றவர்களும் நல்லாயிருக்கு என்று சொல்லி வாழ்த்துவாங்க.. அதுதானே நடக்கும். பிரபல நடிகை ஒருவர் இதையெல்லாம் தாண்டி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார். இதுதான் எனது பிறந்த நாள் ட்ரஸ் என்று சொல்லி உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் ரசிகர்களுக்கு போஸ் கொடுத்திருக்கிறார்.
பல வி.ஐ.பி.க்கள் பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாட வேண்டும் என்று புதுமைகளை செய்ய யோசிப்பார்கள்.​​ அந்த வகையில் சினிமா மற்றும் பொழுதுபோக்குத் துறையைச் சேர்ந்தவர்கள் தான் உடனடியாக ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறார்கள். பிரபல நடிகை ஒருவர் தனது 48 வது பிறந்த நாளை எப்படி கொண்டாடினார் தெரியுமா... நிர்வாணமாக போஸ் கொடுத்து அந்த படத்தை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார்.


ஆஸ்கார் விருது வென்ற க்வினெத் பேல்ட்ரோ தான் அந்த நடிகை. தனது இணைய தள பக்கத்துக்கு வந்தவர். "இன்று எனது பிறந்தநாள். இதுதான் பர்த்டே ட்ரஸ் என்று உடலில் ஒட்டுத்துணியில்லமல் நிர்வாணமாக நின்றதுடன் பிறந்தநாள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. அதிசயமான புத்தம் புதிய உடல் வெண்ணெய்க்கு நன்றி என்று கூறியிருக்கிறார்.
48 வயதிலும் சும்மா அரேபிய குதிரை மாதிரி இருக்கீங்க என்று சிலர் அவரை வர்ணித்துள்ளனர். சிலர், ஓஹோ இதுதான் பர்த் டே ட்ரெஸ்ஸா என்று கலாய்த்திருக்கின்றனர்.
'அவென்ஜர்ஸ்: எண்ட் கேம்' நடிகையின் மகள் ஆப்பிள், "மாம்" என்று ஒரு இன்ப அதிர்ச்சியை வெளியிட்டதுடன். "ஆனாலில் நீங்கள் கொல்கிறீர்கள் "என்று ஆச்சர்யம் தெரிவித்திருந்தார்.


சமீபத்தில் 2018 ஆம் ஆண்டில் தயாரிப்பாளர் பிராட் ஃபால்ச்சுக்கை மணந்த க்வினெத் பேல்ட்ரோ எதிர் காலத்தில் 'அயர்ன் மேன்' மற்றும் 'அவென்ஜர்ஸ்' படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் அவர் நடித்துள்ள ஆவணப்பட வெப் சீரிஸாக 'தி கூப் லேப் வித் க்வினெத் பேல்ட்ரோ தற்போது ஸ்ட்ரீமிங் ஆகி வருகிறது.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>More Cinema News

அதிகம் படித்தவை