சிவகார்த்திகேயன் பட நடிகர் திடீர் தற்கொலை..

Actor Sivakarthikeyan Movie Actor Thennavan Suicide

by Chandru, Sep 30, 2020, 11:47 AM IST

கொரோனா காலத்தில் வைரஸ் பாதித்துப் பலி ஆகிறவர்கள் ஒரு பக்கம் இருக்கிறார்கள். அதே சமயம் வேலையைப் பறிகொடுத்து வருமானம் இல்லாமல் தற்கொலை செய்து கொள்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இளம் நடிகர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்த முதல் படம் மெரினா.

இப்படம் 2012ம் ஆண்டு திரைக்கு வந்தது. பாண்டி ராஜ் இயக்கி இருந்தார். படத்தில் சிறுவர்கள் கதாபாத்திரமும் இடம்பெற்றிருந்தது. கடற்கரை பகுதியில் இதன் படப் பிடிப்பு நடந்ததால் அங்கு வேலை செய்யும் பாத்திரங்களில் சிறுவர்கள் நடித்திருந்தனர். அதில் ஒருவர் தென்னவன். இவர் மைலாப்பூர் நொச்சிக் குப்பத்தைச் சேர்ந்தவர். இவர் குடும்ப பிரச்சனை காரணமாக திடீரென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தென்னரசுவின் மரணம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை