கிளுகிளு பட இயக்குனர் ஹீரோவானார்.. அடுத்து இயக்கி நடிக்கும் படமும் கிளுகிளுப்புதான்..

Advertisement

அனைத்து தொழிலையும் போல, திரைப்படத் துறை படங்கள் தயாரிப்பது லாபம் பார்க்கத் தான். சில படங்கள் விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டாலும், தயாரிப்பாளர்களுக்குச் சொற்ப லாபமே கிடைக்கும். விமர்சன ரீதியாகக் கொண்டாடப்பட்ட சில படங்கள் வசூல் ரீதியில் தோல்வியடைந்ததும் உண்டு.ஒரு சில படங்கள் விமர்சன ரீதியாகக் கொண்டாடப்படவில்லை என்றாலும், வசூலைக் கொட்டிக் கொடுத்துள்ளன.

இதற்கு உதாரணம் பல படங்களைச் சொல்லலாம். 2018-ம் ஆண்டு வெளியான 'இருட்டு அறையில் முரட்டுக் குத்து' படம் இந்த வகை தான். திரையரங்கில் இளைஞர்கள் கொண்டாடிய இந்தப் படம் தயாரிப்பாளர் போட்ட முதலீட்டை விட 5 மடங்கு லாபம் சம்பாதித்துக் கொடுத்தது.

இப்போது, இதன் 2-ம் பாகத்தை உருவாக்கியுள்ளார் சந்தோஷ் பி.ஜெயக்குமார். இயக்குநராக மட்டுமன்றி, நாயகனாகவும் நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு 'இரண்டாம் குத்து' எனப் பெயரிடப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க இளைஞர்களைக் கவர்வதற்காகவே இந்தப் படத்தை ப்ளையிங் ஹார்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் எஸ்.ஹரி பாஸ்கர் தயாரித்துள்ளார்.'இரண்டாம் குத்து' படத்தின் நாயகிகளாக மீனாள், ஹரிஷ்மா, அக்ரிதி ஆகியோர் நடித்துள்ளனர். ரவி மரியா, சாம்ஸ், பிக் பாஸ் டேனி, டி.எஸ்.கே, ஷாலு ஷம்மு, லொள்ளு சபா மனோகர், லொள்ளு சபா சாமிநாதன், சிங்கம் புலி என ஒரு நட்சத்திர பட்டாளமே 'இரண்டாம் குத்து' படத்தில் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளராக பாலு, இசையமைப்பாளராக எஸ்.என்.பிரசாத், எடிச்சராக பிரசன்னா ஜி.கே பணிபுரிந்துள்ளனர்.இளைஞர்களுக்குக் கொண்டாட்டமாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் படப் பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்ட பணிகளும் முடிவடைந்துவிட்டது. சென்சார் பணிகளும் முடிந்து வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது. கொரோனா அச்சுறுத்தல் முடிந்து திரையரங்குகள் திறக்கப்பட்டவுடன், இளைஞர்களைத் திரையரங்கிற்கு அழைத்து வரும் படமாக 'இரண்டாம் குத்து' இருக்கும் என்கிறது படக்குழு.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>