பாண்டியன் ஸ்டோர்ஸில் களம் இறங்கிய இளஞ்ஜோடிகள்.. இவங்களா !!அப்போ புல் டைம் என்ஜாய்மென்ட் தான் போங்க

updates of pandiyan stores

by Logeswari, Oct 2, 2020, 19:48 PM IST

தனியார் தொலைக்காட்சியில் வெற்றி கொடி கட்டி பறக்கும் முன்னனி சீரியலில் ஒன்று தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இதில் அண்ணன்,தம்பிகள் என்று ஒரு அழகான கூட்டு குடும்பமாய் வாழ்ந்து வாழ்க்கையின் எதார்த்தத்தை பகிர்ந்துவருகின்றனர். இந்த சீரியலில் மீனா என்கிற ஹேமா மற்றும் முல்லை என்கிற சித்து இவர்களுக்கு மக்கள் இடையே தனிப்பட்ட பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு.

இந்நிலையில் மீனா சீரியலில் கர்ப்பமாக உள்ள கதாபாத்திரத்தை இயக்குனர் வழங்கினார். கடவுளின் அருளால் நிஜ வாழ்க்கையிலும் கர்ப்பம் தரித்தார். சீரியலில் சில நாட்களுக்கு முன் மீனாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து தனது நிஜவாழ்க்கையிளும் ஆண் குட்டியான சிங்க குட்டியை பெற்று எடுத்தார். இதையடுத்து அவரால் சீரியலில் தொடர முடியவில்லை. இனிமேல் சீரியலில் மீனாவை பார்க்கமுடியாது என்று ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை தந்தது. ஹேமா தனது சமூக வலைத்தளங்களில் சில தினங்களுக்கு முன்பு எல்லாருக்கும் ஒரு பாசிட்டிவ்வான செய்தி காத்து இருக்கிறது என்பதை பகிர்ந்துள்ளார். இதலில் இருந்து மீனா மீண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸில் நடிப்பார் என்பது எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் கதை களம் முல்லை கதிர்களிடையே நோக்கி ஆரம்பித்துள்ளது. இருவரின் வாழ்க்கை நகரத்தை நோக்கி செல்கின்றது. அவர்கள் பல தடைகள்,நிறைய காதல்,கொஞ்சம் சண்டை ஆகியவை கலந்து சென்னையை சென்று அடைந்தனர். சென்னையில் கதிரின் நண்பனை சந்திக்கின்றனர். அவர்கள் தான் புதிய காதல் ஜோடிகள் மைனா நந்தினி அவரின் கணவர் லோகேஷ். சில நாளுக்கு முன்னர் தான் மைனாவும் ஆண் குழந்தையை பெற்று எடுத்தார். குழந்தை பிறந்த பிறகு ஒரு மாதம் கூட ஆக வில்லை அதுக்குள் நடிக்க ஆரம்பித்துவிட்டார். இதனை அடுத்து ரசிகர்களும் மைனா நந்தினிக்கு வாழ்த்துக்களை அள்ளி தெளித்து வருகின்றனர். முல்லை, கதிர், மைனா அவரது கணவர் நான்கு பேரும் சேர்ந்து என்ன குதுக்கலம் செய்ய போகிறார்கள் என்பதை வரும் எபிசோடுகளில் கண்டு மகிழுங்கள். ஆனால் மைனா களத்தில் இறங்கினாளே புல் டைம் என்ஜாய்மென்ட் தான்....

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை