கணவனுக்கு மார்பிங்கில் மனைவியின் ஆபாச படம் டிவி நடிகர், டாக்டர் கைது...!

Woman morphed nude photos circulated in social media, doctor, serial actor attested

by Nishanth, Oct 3, 2020, 18:12 PM IST

இளம் பெண்ணின் போட்டோவை மார்பிங் மூலம் நிர்வாண படங்களாக்கி அதை அவரது கணவர் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பி வைத்த சம்பவத்தில் மலையாள டிவி நடிகர், அந்த பெண்ணின் உறவினரான பல் டாக்டர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.கேரள மாநிலம் கவடியார் என்ற இடத்தை சேர்ந்தவர் நிகில். கடந்த சில தினங்களுக்கு முன் இவரது செல்போனில் வாட்ஸ்ஆப் மூலம் அவரது மனைவியின் ஆபாசப் படங்கள் வந்தன. அதைப் பார்த்த நிகில் கடும் அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் தான் அது மார்பிங் செய்யப்பட்ட போட்டோக்கள் எனத் தெரியவந்தது. இதுகுறித்து நிகில் திருவனந்தபுரம் நகர போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். அந்த ஆபாசப் படங்கள் வந்த செல்போன் நம்பரை வைத்து நடத்திய விசாரணையில், அது திருவனந்தபுரம் அருகே உள்ள வட்டப்பாறை என்ற இடத்தை சேர்ந்த ஒருவர் பயன்படுத்தும் நம்பர் எனத் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அந்த வாலிபரைப் பிடித்து விசாரித்தபோது, அப்படி ஒரு நம்பரை தான் பயன்படுத்தவே இல்லை எனக் கூறினார். ஆனால் முதலில் போலீசார் அதை நம்பவில்லை. நடந்து நடத்திய விசாரணையில், அந்த நம்பரை அவர் பயன்படுத்தவில்லை எனத் தெரியவந்தது. இதையடுத்து குறிப்பிட்ட செல்போன் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு போலீசார் விசாரித்தனர். இதில் திருவனந்தபுரத்தில் செல்போன் ரீசார்ஜ் கடை நடத்திவரும் ஸ்ரீஜித் என்பவர் குறித்த விவரம் போலீசுக்கு கிடைத்தது.அவரிடம் விசாரித்த போது தான் உண்மை சம்பவம் தெரியவந்தது. ரீசார்ஜ் கடை நடத்திவரும் ஸ்ரீஜித், வட்டப்பாறை வாலிபரின் முகவரியைப் பயன்படுத்தி ஒரு சிம் கார்டு வாங்கி உள்ளார். அந்த சிம் கார்டை மலையாள டிவி நடிகரான ஷாஜிர்கானிடம் கொடுத்துள்ளார். அந்த சிம்மில் இருந்து தான் இளம்பெண்ணின் மார்பிங் செய்யப்பட்ட போட்டோக்களை அவரது கணவர் மற்றும் அவரது உறவினர்களுக்கு ஷாஜிர்கான் அனுப்பி வைத்துள்ளார் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து நடிகர் ஷாஜிர்கானை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

இந்த விசாரணையில் திருவனந்தபுரம் அரசு பல் மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வரும் மனோஜ் கூறியதின் படியே இளம்பெண்ணின் மார்பிங் செய்யப்பட்ட நிர்வாண படங்களை அவரது கணவர் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பி வைத்ததாகக் கூறினார். இதையடுத்து டாக்டர் மனோஜை போலீசார் கைது செய்தனர். இவர் அந்த இளம்பெண்ணின் பெரியம்மா மகன் ஆவார். குடும்பத்தகராறு காரணமாகப் பழி வாங்குவதற்காகவே நிர்வாண புகைப்படங்களை ஷாஜிர்கான் மூலம் அனுப்பியதாக டாக்டர் மனோஜ் கூறினார். 3 பேரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஷாஜிர்கான் ஏராளமான மலையாள டிவி தொடர்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அதிகம் படித்தவை