80 நாள் யூகத்தையும், வைரஸையும் விரட்டி பிக்பாஸ் 4 நடக்கப்போவது எத்தனை நாள் தெரியுமா? இந்த முறையும் சென்சுரியை தாண்டி அடிக்க கமல் முடிவு..

BigBoss 4 Show continious 105 days: Official annnouncement

by Chandru, Oct 3, 2020, 18:37 PM IST

கிரிக்கெட்டில் சென்சுரி போட வீரர் யாராவது நெருங்கிக்கொண்டிருக்கும் போது மனசு திக் திக்கென அடிப்பது போல் பிக்பாஸ் ஷோ 100 நாட்களை நெருங்கும்போது ஜெயிக்கப்போவது யாருன்னு ஒரு போட்டியே ரசிகர்களிடம் நடக்கும் அது விவாதமாக வலைத் தள பக்கங்களில் எதிரொலிக்கும். ஆனால் இம்முறை கொரோனா ஊரடங்கு, கட்டுப்பாடு என்று பயமுறுத்திய நிலையில் பிக்பாஸ் 100 நாட்களிலிருந்து 80 நாட்களாகக் குறைக்கப்படுவதாக ஒரு ரூமர் வந்தது. இது பிக்பாஸ் ரசிகர்களுக்கு ஏமாற்றமாகக் கூட இருந்தது. ஆனால் அதையெல்லாம் உடைத்தெறிந்து கோ கோ கொரோனா என்று விரட்டியடித்து பிக்பாஸ் 100 நாட்கள் தாண்டி நடக்கும் என்பது உறுதியாகி இருக்கிறது.

பிக்பாஸ் ஷோ பற்றிய தகவல்கள் விஜய் டிவியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளிவந்த நிலையில் தற்போது டிஸ்னி ஹாட் ஸ்டாரின் டிவிட்டர் பக்கத்தில் 105 நாட்கள் பிக்பாஸ் ஷோ நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு தானே ஆசைப்பட்டாய் பிக்பாஸ் ரசிகா! பிக்பாஸ் கிராண்ட் லான்ச் ஒன் டே டு கோ என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது பிக்பாஸ் பிரமாண்ட அறிவிப்புக்கு இன்னும் ஒருநாள் கழிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதுவும் சற்று வித்தியாசமாகக் கடக ராசி நேயர்களே, மிதுன ராசி நேயர்களே, மேஷ ராசி நேயர்களே, ரிஷப ராசி நேயர்களே என்று ராசி பலன் சொல்லும் பாணியில் எல்லா ராசிகளும் அடுத்த 105 நாட்களுக்கு அன்லிமிடெட் ஃபன் அனுபவிப்பீர்கள் என்று ராசிபலன் பாணியில் சொல்லப்பட்டிருக்கிறது.

ராசிபாத்து பலன் சொல்கிறது பிக்பாஸ் நிகழ்ச்சி அட்மின். ஆனால் அந்த ஷோவை நடத்தப் போவது ராசி மற்றும் கடவுள் நம்பிக்கை இல்லாத கமல்ஹாசன் தான். அவர் வாரா வாரம் கண்டிப்பாக போட்டியாளர்களின் ராசியை புதிது புதிதாகத்தான் கணிப்பார் என்பதில் சந்தேகமில்லை. யார் சிரிக்கப்போகீறார்கள், யார் அழப் போகிறார்கள் என்பது நாளை முதலே தெரியத் தொடங்கும் என்பதில் சந்தேகமில்லை.

More Bigg boss News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அதிகம் படித்தவை