எஸ்பிபிக்கு, எம்ஜிஆர் படத்தில் வரும் ஆயிரம் நிலவே வா பாடல் முதல் பாடல் அல்ல.. பிரபல நடிகர் உடைத்த ரகசியத்தால் பரபரப்பு..

Sivakumar Open Screat about SPB First Song

by Chandru, Oct 3, 2020, 19:05 PM IST

திரைப்பட பாடகர் எஸ்பி.பாலசுப்ரமணியம் தனது 74வது வயதில் உடல் நலமில்லாமல் இறந்தார். அவரது உடல் தாமரை பாக்கம் பண்ணை வீட்டில் அடக்கம் செய்யப்பட்டது.
முன்னதாக எஸ்பிபி மருத்துவமனையில் சேர்ந்து திடீர் உடல்நிலை மோசமானதிலிருந்தே அவரைப்பற்றி வெவ்வேறு வதந்திகள் வெளிவந்தன. அவருக்கு கொரோனா குணமாகிவிட்டது, நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை நடக்க உள்ளது எனப் பல ரூபங்களில், வதந்தி பரவியது, அவர் இறந்த பிறகும் மருத்துவமனையில் சர்ச்சை எழுந்தது.

இதற்கெல்லாம் ஒருவழியாக அவரது மகன் எஸ்பி சரண் அவ்வப்போது முற்றுப்புள்ளி வைத்தார். ஆனால் அவருக்குக் கூட தெரியாத ஒரு ரகசியத்தை நடிகர் சிவகுமார் வீடியோவில் வெளியிட்டிருக்கிறார். எஸ்பிபி திரைக்கு வந்த பாடிய முதல் பாடல் எம்ஜிஆர் நடித்த அடிமைப் பெண் படத்தில் இடம் பெற்ற ஆயிரம் நிலவே வா என்ற பாடல் என இதுவரை சொல்லப்பட்டு வந்தது. அதனை மறுத்து தனக்குத்தான் எஸ்பிபி முதல் பாடல் பாடினார் எனக் குறிப்பிட்டிருக்கிறார் சீனியர் நடிகர் சிவகுமார்.

அதில் , 1969ம் ஆண்டு பொங்கல் தினத்தில் பால்குடம் திரைப்படம் ரிலீஸ் ஆனது. அந்த படத்தில் இடம் பெற்ற மல்லிகைப்பூ வாங்கி வந்தேன் என்ற பாடல், அடிமைப்பெண், சாந்தி நிலையம் பாடல்களுக்குப் பின்னர் ரிக்கார்டிங் செய்யப்பட்டாலும், பால்குடம் படம் முதலில் ரிலீஸானதால் எஸ்பிபி பாடிய முதல் பாடல் எனது படத்தில் தான் என்பதை நான் பெருமையுடன் கூறிக்கொள்ள முடியும் என சிவகுமார் தெரிவித்துள்ளார்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை