நடிகர் மாதவன் கட ந்த 2 வருடமாக வேறெந்த வேலையிலும் கவனத்தை திசை திரும்பாமல் தான் இயக்கி நடித்து வரும் இஸ்ரோ விஞ்ஞானி நம்பியின் வாழ்க்கை கதையாக உருவாகும் தி ராக்கெட்டரி: தி நம்பி எஃபெக்ட் படத்தில் மூழ்கி இருக்கிறார். இப்படத்திற்காக வெண் தாடியுடன் தனது தோற்றத்தையே மாற்றிக்கொண்டு விஞ்ஞானியாகவே மாறி இருக்கிறார். இப்படத்தின் இறுதி கட்ட பணிகள் நடந்து வருகிறது. படத்திற்கு சாம் சிஎஸ் இசை அமைக்கிறார்.
முக்கிய காட்சிகளுக்கு சிம்போனி இசைக்குழுவை அழைத்து இசை பதிவு செய்யப்பட்டது. அந்த வீடியோவை மாதவன் வெளியிட்டதுடன் அதுபற்றி எழுதியதாவது:
“இன்று # ராக்கெட்ரி படத்தின் மதிப்பை கூட்டுவதற்கான பணி மேற்கொள்ளப்பட்டது. வலிமைமிக்க மசேடோனியன் சிம்பொனிக் இசைக்குழு (MacedonianSymphonic Orchestra) உடன் இசை பதிவு நடக்கிறது. ஜிம் சத்யாவின் ஏற்பாடுகளுடன் சாம் சி எஸ் இசை. மைக்கேல் ஹைமன் தலைமையிலான ஆர்கெஸ்ட் ரேஷன் குழு - இசையமைப்பாளர், இசைக்குழு, கிறிஸ் வைட்டர் மியூசிக் மற்றும் ஜப்ஜிசிங் வலேச்சாவுடன் இசை இயக்குனர். நாங்கள் நீண்ட காலமாக உருவாகி பதிவு செய்த சில சிறந்த இசையைச் சொல்ல வேண்டும். போஹேமியா ஜங்ஷன் லிமிடெட் ஃபேம்ஸ் ப்ராஜெக்ட் - ஆர்கெஸ்ட்ரா மியூசிக் ரெக்கார்டிங் தயாரித்த அனைத்து முன்பதிவு மற்றும் அமர்வுகள் சச்சின் லால் ஃபேம்ஸ் ப்ரொஜெக்ட் லாரன்ட் கே அவர்களின் அனைத்து கடின உழைப்பிற்கும் நன்றி. படம் வெளி யாகும்போது இதன் அருமை வெளிப்படும். அதை கேட்டு உணர்வீர்கள் என்றார்.