நயன்தாராவுக்காக கிரிக்கெட் கமென்ட்ரியை விட்டு ஓடிவந்த நடிகர்.

Nayanthara Mookkuththi Amman Releae On OTT

by Chandru, Oct 5, 2020, 18:22 PM IST

நடிகை நயன்தாரா இதுவரை ஏற்காத வேடத்தில் முதன்முறையாக அம்மன் வேடம் ஏற்று நடித்திருக்கும் படம் மூக்குத்தி அம்மன். காமெடி நடிகர், கிரிக்கெட் வர்ணணையாளர், ரேடியோ ஜாக்கி என பன்முகம் கொண்ட ஆர்.ஜே. பாலாஜி இப்படத்தை இயக்கி உள்ளார்.


எத்தனைபேர் நயன்தாரா கால்ஷீட்டுக்காக வெயிட்டிங்கில் இருக்கும்போது ஆர்ஜே பாலஜிக்கு மட்டும் எப்படி இவ்வளவு சீக்கிரம் கால்ஷீட் கொடுத்தார் என்று கோலிட்டில் ஒரு பக்கம் பேசிக்கொண்டிருந்த நிலையில் இவர் நயன்தாரவை வைத்து படத்தையே இயக்கி முடித்து விட்டார். அதற்கு காரணம் இதுபக்தி படம் அதுவும் அம்மன் வேடம் என்றதும் உடனே கால்ஷீட் ஒகே செய்து விட்டார் நயன். விரதம் இருந்து இப்படத்தில் நடித்துள்ளார்.
அம்மன் படம், ஆக்‌ஷன் படம், ரஜினிபடம், கமல்படம், விஜய் படம், அஜீத் படம் என்றாலும் யாருக்கும் கொரோனா வைரஸ் விதிவிலக்கு தரவில்லை எல்லா படத்தையும் அப்படியே நிறுத்திவிட்டது. நல்ல வேளையாக இவற்றில் நயன்தாரா நடித்துள்ள மூக்குத்தி அம்மன், விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் முடிந்து திரைக்கு வர தயாராக இருக்கிறது. மாஸ்டர் படம் தியேட்டர் ரிலீசுக்காக காத்திருக்கிறது. மூக்குத்தி அம்மன் படத்தை ஒடிடியில் ரிலீஸ் செய்ய முடிவு செய்திருக்கிறார் டைரக்டர் ஆர்.ஜே.பா லாஜி. இப்படத்தை இவருடன் சேர்ந்து என் .ஜே.சரவணனும் இணைந்து இயக்கி உள்ளார்.


ஐபிஎல் கிரிக்கெட் போட்டி துபாயில் நடக்கிறது அதன் வர்ணனையாளராக ஆர்.ஜே பாலாஜி சென்றிருந்தார். இதற் கிடையில் வர்ணனையை பணியை பாதியிலேயே நிறுத்திவிட்டு சென்னை திரும்புகிறார். 20 நாள் தாங்க மூக்குத்தி அம்மன் பட ரிலீஸ் வேலை திரும்பி வந்து விடுவேன் என கிரிக்கெட் ரசிகர்களுக்கு டிவிட்டரில் மெசேஜ் தெரிவித்திருக்கிறார்.வரும் நவம்பர் மாதம் தீபாவளிக்கு மூக்குத்தி அம்மன் படத்தை ஒடிடி தளத்தில் ரிலீஸ் செய்வதற்கான பணிக்காகவே பாலாஜி சென்னை திரும்புகிறார் என்று கூறப்படுகிறது.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அதிகம் படித்தவை