பிகில் படத்தில் நடித்த பாண்டியாம்மாளின் அசத்தலான போட்டோஷூட் !!

indraja shankar photoshoot for girl abuse awareness

by Logeswari, Oct 6, 2020, 20:29 PM IST

தமிழ் திரையுலகில் காமெடி நடிகரான ரோபோ ஷங்கரின் மகள் தான் இந்திரஜா.இவர் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருப்பவர்.

இவரை இந்திரஜா என்று சொன்னால் யாருக்கும் தெரியாது.ஆனால் பிகில் படத்தில் நடித்த பாண்டியம்மாள் என்றால் எல்லோருக்கும் தெரியும்.அந்த படத்திலே தெரிந்திருக்கும் அவர் மிகவும் பாசிட்டிவ் நிறைந்த தன்மை உடையவர்.மனதில் எந்த வித தயக்கமும் இன்றி ஒரு பெண்ணாய் துணிந்து செயல்பட கூடியவர்.பிகில் படத்தில் இவர் நடித்திருந்த பாண்டியம்மாள் கதாபாத்திரம் அனைவருமே புகழ்ந்து பேச வைத்தது.இவர் சமிப காலாமாக வெவ்வேறு கதாபாத்திரத்தில் போட்டோஷூட் மேற் கொண்டு வருகிறார்.இந்நிலையில் இரண்டு நாளைக்கு முன்பு பெண்களுக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமை குறித்து விழிப்புணர்வு ஊட்டும் வகையில் போட்டோஷூட் செய்து இருந்தார்.இதலில் இவரின் நடிப்பு அம்சமாகவும்,தத்துரூபமாகவும் இடம் பெற்றது.தற்போது இருக்கும் காலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை இதனை துணிச்சலுடன் தனது நடிப்பிலும் ஆடையிலும் வெளிகொண்டு வந்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் யாவும் இன்ஸ்டாகிராமில் பயங்கர வைரலாகி வருகிறது.இது குறித்து ரசிகர்களும் இந்திரஜாவிற்கு கமண்ட் மூலம் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றன.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>More Cinema News

அதிகம் படித்தவை