குறைந்த வெளிச்சத்தில் கூகுள் காமிரா கோ செயலி மூலம் புகைப்படம் எடுக்கும்போது துல்லியமாக அமைவதற்கு நைட் மோட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
"குறைந்த வெளிச்சம், காமிரா, ஆக்சன்! எந்த நேரமானாலும் காமிரா கோவில் நைட் மோட் உடன் உங்கள் ஆண்ட்ராய்டு போனில் உயர்தரமான புகைப்படங்கள் எடுங்கள்" என்று கூகுள் நிறுவனம் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.
இந்த காமிரா செயலி, மென்பொருள் மற்றும் ஹார்ட்வேர் இணைந்து செயல்படுவதாகும். குறிப்பிட்ட காமிராக்களுக்கு மட்டுமே இது பொருந்தும்.
நோக்கியா 1.3, விகோ ஒய்61, விகோ ஒய்81 ஆகிய ஸ்மார்ட்போன்களில் காமிரா கோ செயல்படும். குறைந்த விலை ஸ்மார்ட்போன்களான இவற்றிற்கான காமிரா கோ செயலியில் இந்த ஆண்டு இறுதியில் எச்டிஆர் செயல்பாடும் வழங்கப்படும்.