இந்தி, தமிழ் உள்பட பல மொழி திரைப்படங்களில் வில்லனாக நடித்து வருபவர் பாலிவுட் நடிகர் சோனுசூட்.1999-ஆம் ஆண்டு வெளியான "கள்ளழகர்" என்ற தமிழ்த் திரைப்படத்தில் வில்லனாக நடித்து நடிகராக சோனு சூட் அறிமுகமாகியுள்ளார். பின்னர் அதே ஆண்டு நடிகர் விஜய் நடித்த "நெஞ்சினிலே" திரைப்படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தவர்,
பின்னர் தமிழில் சந்தித்த வேளை, மஜூனு, கோவில் பட்டி வீரலட்சுமி, ராஜா எனப் பல படங்களில் நடித்து வந்துள்ளார்.திரையில் வில்லனாக வலம் வருபவர் நிஜவாழ்க்கையில்
மக்களிடம் ஹீரோவாக வலம் வருகிறார். இதற்குக் காரணம். ஒரு குக்கிராமத்தில் செல்போன் டவர் அமைத்துக் கொடுத்தது தான்.சோனு சூட் கொரோனா காலத்தில் பல இடங்களில் பல்வேறு பல மக்கள் நலப்பணிகளில் ஈடுபட்டுள்ளார் .
ஹரியானா மாநிலத்தில் மோர்னிமலை என்ற பகுதியில் தபானா என்ற கிராமத்தில் பள்ளி சிறுமி ஒருத்தி மரத்தில் ஏறி அமர்ந்து கொண்டு செல்போன் சிக்னலுக்காக போராடிக் கொண்டிருந்தார். மூலம் கல்வி கற்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அந்த சிறுமி இவை வசிக்கும் கிராமத்தில் செல்போன் டவர் இல்லாததால் சிக்னல் சரிவர கிடைக்கவில்லை. இதனால்தான் சிக்னலுக்காக மரத்தின் மீது ஏறி அமர்ந்து போராடிக்கொண்டிருந்தார். அதைப் படம் பிடித்த உள்ளூர் வாசி ஒருவர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார் அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. அதிலும் குறிப்பாகச் சிலர் பாலிவுட் நடிகர் சோனு சூட்டை டேக் செய்து இந்த வீடியோவை பகிர்ந்து இருந்தனர். இந்த வீடியோவை பார்த்த சோனுசூட் உடனடியாக அந்த மலைப்பகுதி மாணவ மாணவிகள் படிப்புக்கு உதவிட முன்வந்தார்.
ஏர்டெல் நிறுவனத்துக்காக செல்போன் டவர்கள் அமைத்துக் கொடுக்கும் இன்டஸ் என்ற நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் தன் நண்பருமான ககன் கபூரை அணுகி மோர்னி கிராமத்தில் செல்போன் டவர் அமைக்க உதவுமாறு வேண்டுகோள் விடுத்தார். இவரது வேண்டுகோளை ஏற்ற இண்டஸ் நிறுவனம் மறுநாளே அங்கு, செல்போன் டவர் அமைக்கும் வேலைகளைத் துவங்கியது.தற்போது, பணி நிறைவடைந்தது, இந்த கிராமத்தில் நல்லமுறையில் சிக்னல் கிடைத்து வருகிறது . இதனால், மோர்னி வட்டார மாணவ மாணவிகளுக்கு ரொம்ப சந்தோசம்.
இது பற்றி சோனு சூட், கிராமப்புற குழந்தைகள் அடிப்படை கல்வியைப் பெற இவ்வளவு கஷ்டப்படுவது என் மனதை வேதனைக்குள்ளாக்கியது. அதனால்தான், எவ்வளவு வேகமாக முடியுமோ. அவ்வளவு வேகமாகச் செயல்பட்டு செல்போன் டவர் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டோம். இப்போது எனக்கு மன நிறைவாக இருக்கிறது என்று பெருமிதம் பொங்கச் சொல்லியிருக்கிறார்.