இனி ஸ்விக்கி மூலம் பிளாட்பார உணவகங்களிலிருந்து உணவு கிடைக்கும். மத்திய அரசு ஏற்பாடு..!

Food is now available from platform restaurants via Zwicky. Organized by the Central Government

by Balaji, Oct 7, 2020, 17:43 PM IST

பிரதமர் ஸ்வானிதி திட்டத்தின் கீழ் தெருவோரக் கடைகளில் விற்கப்படும் உணவுகளை ஆன்லைனில் விற்பனை செய்ய, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகம் ஸ்விக்கி நிறுவனத்துடன் இணைந்துள்ளது . இதன் மூலம் சுமார் 50 லட்சம் தெரு உணவு விற்பனையாளர்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் கட்டமாக அகமதாபாத், சென்னை, டெல்லி, இந்தூர் மற்றும் வாரணாசி ஆகிய 5 நகரங்களில் உள்ள தெருவோர விற்பனையாளர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.பிறகு படிப்படியாக மற்ற நகரங்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்.

ஸ்விக்கி நிறுவனத்துடன் இணைந்து இதை மத்திய அரசு செயல்படுத்த முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் மாநகராட்சிகள், எஃப்எஸ்எஸ்ஏஐ, ஸ்விக்கி மற்றும் ஜிஎஸ்டி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. விரைவில் இந்த முறை நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிகிறது.

You'r reading இனி ஸ்விக்கி மூலம் பிளாட்பார உணவகங்களிலிருந்து உணவு கிடைக்கும். மத்திய அரசு ஏற்பாடு..! Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை