விஜய் சேதுபதி படத்தில் அறிமுகமாகும் சர்வதேச பிரபலம்.. மெலடி இசை அமைப்பாளர் படத்திற்கு புது மெருகு..

An International talent to debut in Vijay Sethupathis next!

by Chandru, Oct 8, 2020, 17:58 PM IST

விஜய் சேதுபதி நடிக்கும் படம் லாபம். இப்படத்தை எஸ்பி.ஜனநாதன் இயக்குகிறார். இதில் ஸ்ருதி ஹாசன் ஹீரோயினாக நடிக்கிறார். ஏற்கனவே புறம் போக்கு என்கிற பொதுவுடைமை என்ற படத்தில் விஜய் சேதுபதி இயக்குனர் எஸ்.பி. ஜனநாதன் இணைந்தனர். தற்போது இரண்டாவது முறையாக லாபம் படத்தில் கைகோர்த்திருக்கிறார்கள். முதலில் நிலத்தைப் பற்றிப் பேசியவர்கள் இம்முறை விவசாயத்தைப் பற்றிப் பேசுகிறார்கள்.

கார்ப்பரேட் ஆலையை விவசாய நிலத்தில் கட்ட வருவதை எதிர்த்து விஜய் சேதுபதி குரல் கொடுக்கிறார். அவருக்கு உறுதுணையாக இருக்கிறார் ஸ்ருதி ஹாசன், இது போராட்டமாக மாறுகிறது. இந்த போராட்டம் மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் விளைவுகளைக் கதை பேசுகிறது.சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது. விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன், ஜெகபதி பாபு, தன்ஷிகா மற்றும் கலையரசன் இணைந்து நடித்த காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தின. பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

லாபம் படத்துக்கு இசை அமைக்கிறார் டி இமான். இதில் ஒரு சர்வதேச புகழ் ராப் பாடகியை அறிமுகப்படுத்துகிறார். ஈழம் ராப் பாடகி கிளியோ VII அறிமுகப்படுத்துகிறார். இதுபற்றி அறிவித்த டி இமான், சுவிட்சர்லாந்தில் இருந்து ஒரு தமிழ் ஈழம் ராப் பாடகி கிளியோ VII அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>More Cinema News

அதிகம் படித்தவை