கோடிகளை கொட்டி வாங்கிய காரில் பிரபல ஜோடி உல்லாசம்.. சொகுசு காரில் வலம் வரும் தமிழ் நடிகை..

Bhat Fazil and Nazriya Bought Luxury car crore value

by Chandru, Oct 9, 2020, 12:44 PM IST

சில ஹீரோ, ஹீரோயின்கள் விதவிதமாக சொகுசு கார்கள் வாங்குதில் ஆர்வம் காட்டுகின்றனர். இவர்களில் சிலர் கோடிகளைக் கொட்டி சொகுசு காரில் பவனி வருகின்றனர். காதலித்து திருமணம் செய்துக்கொண்ட ஒரு நட்சத்திர தம்பதி ஜோடியாக இணைந்து கார் மோகத்தில் அதிகம் ஈடுபாடு காட்டுகின்றது. காரில் ஒரு கீறல் அல்லது லேசான சொட்டை விழுந்தாலும் உடனே அதை மாற்றிவிட்டு புது கார் வாங்கிவிடுகின்றனர். அந்த ஜோடியின் கதையைப் பார்ப்போம்.

தமழில் 2013ம் ஆண்டு நேரம் என்ற படம் மூலம் அறிமுகமாகி கவர்ந்தவர் நஸ்ரியா நசிம், அடுத்து ஆர்யாவுடன் ராஜா ராணி, தனுஷுடன் நய்யாண்டி துல்கர் சல்மானுடன் வாய் மூடி பேசவும், ஜெய்யுடன் திருமணம் எனும் நிக்ஹா ஆகிய படங்களில் நடித்தார். ஒரு வருடம் அதாவது 2013ல் தமிழ்ப் படத்தில் அறிமுகமாகி 2014ல் கடைசி தமிழ்ப் படத்தை நடித்து முடித்துக் கொண்டார் நஸ்ரியா. மொத்தமே 5 தமிழ்ப் படத்தில் மட்டுமே நடித்தார்.

பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டு மலையாள நடிகர் பஹத் பாசிலை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். நஸ்ரியா ஒரு வருடம் மட்டுமே நடித்தாலும் தமிழில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார். அதே போல் பஹத் பாசில் மலையாளத்தில் நிறையப் படங்களில் நடித்திருந்தாலும் தமிழில் சிவகார்த்திகேயனுடன் வேலைக்காரன், விஜய் சேதுபதியுடன் சூப்பர் டீலக்ஸ் என 2 படங்களில் மட்டுமே நடித்தார்.

பஹத், நஸ்ரியா இருவருமே கார் பிரியர்கள். ஒருமுறை நஸ்ரியா விலை உயர்ந்த கார் ஒட்டிச் செல்லும் இன்னொரு வாகனத்துடன் மோதி லேசான சிராய்யு ஏற்பட்டது உடனே அந்த காரை ஓரம் கட்டிவிட்டு அதைவிட விலை உயர்ந்த காரை பஹத் வாங்கி தந்தார்.
தற்போது நஸ்ரியா, பஹத் ஜோடி பல கோடி மதிப்புள்ள போர்ஷ் காரை வாங்கி உற்சாகத்தில் ஆழ்ந்திருக்கிறது. பச்சை நிறத்தில் பளபளக்கும் அந்த கார் அருகில் இருவரும் நின்று எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருக்கின்றனர் .இப்படம் நெட்டில் வைரலாகி வருகிறது. நஸ்ரியா, பஹத் இருவருமே சொகுசு காரில் உல்லாசமாக வலம் வருகின்றனர்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அதிகம் படித்தவை