பாகுபலி ஹீரோவுடன் இணையும் பாலிவுட் ஜாம்பவான்.

Advertisement

பாகுபலி ஹீரோ பிரபாஸ் நடிக்கும் பிரமாண்ட படம் ஆதிபுருஷ். தீபிகா படுகேனே ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்தில் பாலிவுட் ஜாம்பவான் இணைகிறார்.

அனுபவமிக்க தயாரிப்பு நிறுவனம், தொலைநோக்கு பார்வை கொண்ட ஒரு இயக்குநர், இந்திய சினிமாவின் மாபெரும் நட்சத்திரக் குழு மற்றும் ஒரு அட்டகாசமான கதை, இவை யாவும் சினிமா ரசிகர்களுக்கு ஒரு மிகச்சிறந்த சினிமா அனுபவத்துக்கான காரணிகளாகும். உலகளாவிய மெகா பட்ஜெட், பலமொழித் திரைப்படத்துக்காக, வைஜெயந்தி மூவிஸ், ஆளுமை மிக்க பாலிவுட் நடிகரை நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளது.
கடந்த 50 ஆண்டுகளில், வைஜயந்தி மூவிஸ் நிறுவனம் இந்திய மொழிகளில் ஏராளமான மறக்கமுடியாத படங்களை உருவாக்கி உள்ளது. சமீபத்திய படைப்பாக, புகழ்பெற்ற நடிகை சாவித்திரியின் கதையான, பல தேசிய மற்றும் சர்வதேச விருதுகளை வென்ற நடிகையர் திலகம் படத்தை உருவாக்கியது.

அடுத்து உருவக்கும் பிரமாண்ட படத்தில் வைஜயந்தி நிறுவனத்தின் தயாரிப்பாளரும் நிறுவனருமான அஸ்வினி தத். பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனை ஒப்பந்தம் செய்திருகிறார். இதுபற்றி அவர் கூறும்போது.அமிதாப் பச்சன். மறைந்த என்.டி.ஆர் மிகவும் விருப்பமான நடிகர் ஆவர். என்.டி.ஆர் அவர்களும் நானும் க்ளாசிக் திரைப்படமான ஷோலே-யை பல முறை பார்த்துள் ளோம். என்.டி.ஆரின் ராமகிருஷ்ணா திரையரங்கில் அப்படம் ஒரு ஆண்டுக்கும் மேலாக ஓடியது. இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு, இந்திய சினிமாவின் மிகச்சிறந்த அடையாளமான அமிதாப் பச்சன் அவர்களை எங்கள் வைஜயந்தி மூவிஸ் தயாரிக்கும் மதிப்புமிக்க திரைப்படத்தின் ஒரு அங்கமாக வரவேற்பது உண்மையில் எனக்கு மிகவும் திருப்திகரமான மற்றும் பெருமைமிகு தருணமாகும். இந்த தயாரிப்பு நிறுவனம் என்.டி.ஆர் அவர்களுடன் தன் பயணத்தை தொடங்கி அவராலேயே பெயரிடப்பட்டது.” என்று தயாரிப்பாளர் அஸ்வினி தத் கூறியுள்ளார்.

ஆதிபுருஷ் இயக்குனர் நாக் அஸ்வின் கூறும்போது, எத்தனையோ படங்களுக்கு மத்தியில் பச்சன் சார் எங்கள் படத்தை தேர்ந்தெடுத்திருப்பதில் நான் மிகவும் அதிர்ஷ்டக்காரனாகவும், ஆசிர்வதிக்கப்பட்டவனாகவும் உணர்கிறேன். இது ஒரு முழு நீள கதாபாத்திரம், இதன் மூலம் நாங்கள் அந்த ஆளுமைக்கு நியாயம் செய்வோம் என்று நம்புகிறோம்” என்று இயக்குநர் நாக் அஸ்வின் மகிழ்ச்சியுடன் கூறினார். வைஜயந்தி மூவிஸ் மற்றும் ஸ்வப்னா சினிமாவின் பல படங்களின் தரத்தை உயர்த்துவதில் முக்கிய பங்கு வகித்த இணை தயாரிப்பாளர்களான ஸ்வப்னா தத் மற்றும் பிரியங்கா தத் ஆகியோர் இந்த முக்கிய தருணத்தில் தங்களின் மட்டற்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர். இன்றைய இந்திய சினிமாவின் ஜாம்பவான்களான அமிதாப் பச்சன், பிரபாஸ், தீபிகா படுகோன் உள்ளிட்ட கனவு நடிகர்களுடன், சினிமா ஜாலக்காரர் நாக் அஷ்வின் (நடிகையர் திலகம் புகழ்) இயக்கும் ஆதி புருஷ் படத்தின் மூலம் சினிமா ரசிகர்கள் இதற்கு முன் பார்த்திராத ஒரு சினிமா அனுபவத்தை எதிர்பார்க்கலாம். இப்படம் 2022-ம் ஆண்டு உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
/body>