வைரலாகும் மெர்சல் படக் காட்சிகள்!

பெரும் எதிர்ப்பார்ப்பிற்கு இடையே தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மிகப் பிரம்மாண்டமாக வெளியானது தளபதி விஜய் நடிப்பில் உருவான ’மெர்சல்’ திரைப்படம்.

Mersal scene

சுமார் 4500 திரைகளில் வெளியாகியுள்ள இப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து வருகிறது, சினிமா விமர்சகர்களும் இப்படத்தை பெரிய எதிர்ப்பு தெரிவிக்காமல் பாரட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தில் ஜி.எஸ்.டி மற்றும் டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு எதிரான வசனங்கள் இடம்பெற்றுள்ளதாக கூறி தமிழக பாஜக கடுமையாக விஜய்யையும் படக்குழுவினரையும் விமர்சித்து வருகின்றனர்.

பல தொலைக்கட்சிகளில் விவாத பொருளாக மாறியுள்ள மெர்சல் படத்திற்கு பாஜகவின் எதிர்ப்பின் காரணமாக படத்தின் தயாரிப்பு தரப்பு சம்பந்தப்பட்ட காட்சிகளை வெட்ட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனால், ரசிகர்களும் சமூக வலைத்தளவாசிகளும் சம்பந்தபட்ட காட்சிகளை வெட்டி சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.