வெளியானது நடிகர் பரத்தின் சிம்பா பட ட்ரெய்லர்

நடிகர் பரத் நடிப்பில் புதுமுக இயக்குநர் அரவிந்த் ஸ்ரீதர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’சிம்பா’.

இந்தியாவின் முதல் ஸ்டோனர் படமாக உருவகியுள்ள இப்படத்தில் பிரேம் ஜி அமரன், பானு ஸ்ரீ மெஹ்ரா, சுவாதி திக்‌ஷத், ஸ்வேதா அஸோக், ரமணா உட்பட பலர் நடித்துள்ளனர்.

Simba

இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசையில் உருவாகியுள்ள இப்படதிற்கு சீனு சித்தார்த் ஒளிப்பதிவு பகுதியையும், அச்சு விஜயன் படத்தொகுப்பு வேலைகளையும் செய்துள்ளனர், இப்படத்தை மேஜிக் சேர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிதுள்ளது.

படப்பிடிப்பு உட்பட அனைத்து வேலைகளும் ஒரு வருடத்திற்கு முன்பே முடிந்த நிலையில் இப்படத்தின் டிரையிலர் தற்போது வெளியாகியுள்ளது.

படத்தின் ட்ரெய்லர் இங்கே: