எதிரிக்கு எதிரி நண்பன் ...இவர் தான் இந்த வார கேப்டன் - பிக் பாஸில் என்ன நடந்தது? நாள் 7

Advertisement

முந்தின நாளின் தொடர்ச்சியாக சனம் vs பாலாஜி பஞ்சாயத்து சமல் சார் போனதுக்கு அப்புறம் தொடர்ந்து நடந்துட்டே இருந்தது. பாலாஜி செஞ்சது தப்புனு சனம் சொல்ல, தப்பாவே இருந்தாலும் அது என்னோட ஒப்பீனியன்னு பாலாஜி பிடிவாதம் பிடிச்சாரு. கூடவே இதை ஏன் கமல் சார் கிட்ட சொல்லனும்னு பாலாஜிக்குக் கோபம்.

பாலாஜி மிஸ்டர் இந்தியா டைட்டில் வின்னர், கூடவே அதே பீல்ட்ல அவரோட வாழ்க்கையை அமைச்சுருக்காரு. மாடலிங் ட்ரைனிங், சவுத் இந்தியால மாடலிங் போட்டிகள் நடத்தறது எல்லாம் அவரோட நிறுவனம். அதே மாதிரியான போட்டி நிறுவனம் தான் சூப்பர் மாடல் மீரா மிதுனோடது. அதுல சனம் ஷெட்டியும் ஒரு பார்ட். சனம் பங்கெடுத்து கிட்ட ஒரு போட்டியைத் தான் பாலாஜி டுபாக்கூர்னு சொன்னது தான் பிரச்சனைக்குக் காரணம்.

இதுல இன்னொரு தலை உருள்றது சம்யுக்தாவோடது. சனம் பீல்டுல வரும் போதே சம்யுக்தா பெரிய மாடல். சீனியர். அதை சனம் சொன்னதும் நினைவிருக்கலாம். சம்யுக்தா வெற்றியடைந்த ஒரு மாடலா இருந்தாலும், அதே பீல்டுல இருந்த மீரா மிதுன் கூட ஏதோ வாய்க்கா தகராறு இருக்கும் போல. கடந்து வந்த பாதைல பேசும் போது நான் என்னை சூப்பர் மாடல்னு எல்லாம் சொல்லிக்க மாட்டேன்னு சம்பந்தமே இல்லாம ஒரு ஸ்டேட்மெண்ட் விட்டது நினைவிருக்கலாம். சோ மீரா கிட்ட இருந்து வந்த ஜூனியர் சனம் கூட மிங்கிள் ஆகறது சம்யுக்தாவுக்கு கஷ்டமான் விஷயம். மீராவை தாக்கி பேசினதால பாலாஜி, சம்யுக்தா ரெண்டு பேரும் சனம் ஷெட்டியோட ஹிட் லிஸ்ட்ல வந்துட்டாங்க. இந்த பிரச்சனையில் உள்ள வரும் போதெல்லாம் சம்முவோட மூக்கை உடைக்கறாங்க சனம்.

எதிரிக்கு எதிரி நண்பன் கேட்டகிரில பாலாஜியும், சம்முவும் ஒன்னா சேருவாங்கன்னு பார்த்தா, அதுவும் நடக்கல. சம்மு vs பாலாஜிக்கும் ஏதோ ப்ளாஷ்பேக் இருக்கும் போலிருக்கு. சோ இப்போதைக்கு இந்த மும்முனை பஞ்சாயத்து தொடரும்னு தான் நினைக்கிறேன். இந்த உள்குத்து பத்தி யூட்யூப்ல சில பேட்டிகள் வரலாம். அதுல உண்மையை கண்டுபிடித்து எழுத முயற்சி செய்யறேன். அனேகமாக மீரா மிதுன் சனம் ஷெட்டிக்கு ஆதரவா பாலாஜியை வறுத்தெடுத்து ஒரு பேட்டி தர வாய்ப்பிருக்கு.

ஆண்டவர் வருகை. காமா சோமா உடைகளுக்கு விடுதலை கொடுத்துட்டு கோட் சூட் போட்டு ஜம்முனு வந்தாரு.

விட்ட இடத்துல இருந்து தொடர்வோமானு கேட்ட உடனே மறுபடியும் முதல்ல இருந்தானு சவுண்ட் கொடுத்தது ஹவுஸ்மேட்ஸ் தான். பாலாஜி vs சனம் மேட்டருக்கு வந்தாரு. நல்ல வேளையா அவங்களை பேச விடாம இவரே பேசி தீர்ப்பு கொடுத்தாரு. என்ன இருந்தாலும் பொத்தாம் பொதுவா பாலாஜி அப்படி பேசிருக்கக் கூடாதுனு சுத்தி வளைத்துச் சொன்னது பாலாஜிக்கு புரிய லேட் ஆச்சுன்னு தான் நினைக்கிறேன். என்ன ரியாக்சன் கொடுக்கறதுனு தெரியாம முழிச்சுட்டு இருந்தார்.

அடுத்தது ஹார்ட் + ஹார்ட் பிரேக் ஸ்டாம்ப் டாஸ்க் தான். ஒரு வாரத்துல ரெண்டு தடவை ஒரு டாஸ்க் நடத்தற அளவுக்கு கண்டண்ட் பஞ்சமானு தெரியலை. இல்ல இந்த டாஸ்க்கை வச்சு ஒருத்தருக்கொருத்தர் மூட்டி விடலாம்னு ப்ளான் பண்ணிருக்காங்க போல.

ஆனா ஹவுஸ்மேட்ஸ் தெளிவா இருந்தாங்க. வழக்கம் போல ஷிவானியும், ஆஜித்தும் தான் அதிக ஹார்ட் பிரேக் வாங்க ஆரம்பிச்சாங்க. அதே காரணம் தான். இன்னொரு பக்கம் சுரேஷும், ரேகாவும் அதிக ஹார்ட் பிரேக் வாங்கினாங்க. சுரேஷ் ஹார்ட் பிரேக் கொடுக்கும் போது அனிதாவைக் கூப்பிடலை. ஆனா அனிதா மறக்காம சுரேஷ கூப்பிட்ட போது, இது இன்னும் முடியலனு சொல்றா மாதிரி இருந்துச்சு. சுரேஷ் கேப்டன்சி பொறுப்புக்காக ரம்யாவுக்கு ஹார்ட் கொடுத்தது அட போட வச்சது.

பாலாஜி சம்மு, சனத்துக்கு ஹார்ட் பிரேக் கொடுத்து மறுபடியும் அதே கதையை ஆரம்பிச்ச போது கொட்டாவி வந்தது. நல்ல வேளையா கமல் சார் உள்ள புகுந்து முடிச்சுட்டாரு. இறுதில சுரேஷ் 7, ஷிவானி 6, ரேகா 5 ஹார்ட் பிரேக் வாங்கினாங்க.

அடுத்ததா தலைமை பொறுப்பைப் பத்தி பேச்சு வந்தது. ரம்யா கிட்ட கருத்து கேட்ட போது ஹானஸ்டா பதில் சொன்னாங்க. முதல் வாரம்ங்கறதால எனக்கு இது ஒரு லேர்னிங் எக்ஸ்பீரியன்ஸ். கண்டிப்பா சில தவறுகள் இருக்கும். இன்னும் பெட்டரா பண்ணிருந்திருக்கலாம்னு சொல்லி கமல் கிட்டப் பாராட்டு வாங்கினாங்க.

அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுக்கப் போற வேலையைத் தானே எடுத்துக்கப் போறதா சொன்னதும் இல்லாம அப்பவே செஞ்சாரு. அதிகமான ஹார்ட் பிரேக் வாங்கின சுரேஷ், ஷிவானி, ரேகா 3 பேரும் தான் கண்டஸ்டண்ட்ஸ். ஜனநாயகம் அது இதுனு பேசிட்டு ஹார்ட் பிரேக் வாங்கினது தலைமை பதவிக்கு வரது ஒரு தகுதியா ஆண்டவரே.... ஓட்டெடுப்பு முறையில தேர்தல் நடந்தது. ரேகா 2 ஓட்டு வாங்கினாங்க, ஷிவானி 6, சுரேஷ் 7 ஓட்டு வாங்கி இந்த வார கேப்டன் ஆனார். இந்த வாரம் ஏதாவது சுவாரஸ்யம் கினடக்கும்னு எதிர்பார்க்கலாம்.

வழக்கம் போலத் தலைமையைப் பத்தியும், ஓட்டு போடறதை பத்தியும் டபுள் மீனிங்ல பேசிட்டு, தெரிஞ்சு தான் பேசினேன்னு அவரே கவுண்ட்டர் கொடுத்தாரு. இதை நான் சொல்லிட்டே இருப்பேன்னு வேற சொன்னாரு...

திரு.சாதத் ஹசன் மண்ட்டோ எழுதிய "அவமானம்" என்கிற புத்தகத்தை அறிமுகம் செய்தார். ஹேராம்ல தன் கூட அசிஸ்டெண்டா இருந்த நவாசுதீன் சித்திக் இந்த எழுத்தாளர் கேரக்டர்ல நடிக்கறதா சொன்னது சிறப்பு. அப்புறம் போன வாரம் அவர் சொன்ன ப்ரென்ச் புத்தகத்தோட தமிழ்ப் பதிப்பு பத்தியும் சொல்லிட்டு போனாரு. ஆனா கமல் சார் போன வாரம் ரெபர் செஞ்ச மாதிரி ஒரு புத்தகமே இல்லைனு எழுத்தாளர் திரு சாரு நிவேதிதா ஒரு பதிவு எழுதிருந்தாரு. ஒருவேளை அதனால கூட அந்த புத்தகத்தோட தமிழாக்கத்தைப் பத்தி சொல்லிருக்கலாம்னு நினைக்கிறேன்.

கமல் விடை பெற்றுப் போனதற்குப் பிறகு வீட்டுக்குள்ள ஒரு வட்ட மேஜை மாநாடு நடந்தது. புது கேப்டன் டீம் பிரிச்சுட்டு இருந்தார். கூடவே ஒவ்வொரு டீம்லேயும் நான் ஒருநாள் வேலை செய்வேன்னு சொன்னதை முறையா செஞ்சாருன்னா, அடுத்த வாரம் ஆண்டவரால் பாராட்டப்படும், கூடவே அரசியல்பஞ்ச் அடிக்கவும் பயன்படும். வெறும் கை தூக்கினதால யார் எந்த டீம்னு சரியா தெரியலை. லக்சரி பட்ஜெட் வரைக்கும் ப்ளான் போட்டுட்டாரு. எப்படி நடைமுறைல வருதுனு பார்க்கலாம்.

எல்லாருக்கும் ஓக்கேவானு கேக்கும் போதே சனம் ஒரு அப்ஜெக்சன் சொன்னாங்க. நீங்க யார்கிட்டேயும் கேக்காம நீங்களே டிசைட் பண்ணினது தவறுனு சொல்லவும், சுரேஷுக்கு ஆதரவா சம்மு களமிறங்கி பதில் சொல்றதோட நேற்றைய நாள் முடியுது.

இந்த சீசனோட முதல் வாரம் ரொம்ப மொக்கைனும் சொல்ல முடியாது, சூப்பர்னும் சொல்ல முடியாது. அனிதா + சுரேஷ், சனம், பாலானு இவங்களோட பிரச்சினையை மட்டும் தான் போகஸ் பண்ணிருக்காங்க. ஆரி எல்லாருக்கும் யோகா கத்து கொடுத்துருக்காரு, வொர்க் அவுட் செய்ய எல்லாரையும் அவரே கூப்ட்ருக்காரு. ஆஜித்துக்கு ட்ரைனிங் கொடுத்ததா சொல்றாரு. ஆனா இதெல்லாம் காட்டவே இல்லை. இதே மாதிரி மத்தவங்களும் முயற்சிகள் எடுத்திருக்கலாம். எல்லாருக்கும் சமமான வாய்ப்பு வழங்க வேண்டியது விஜய் டிவியோட கடமை. பிரச்சினைக்குரியவர்களை மட்டும் தொடர்ந்து காட்டறது நல்லதில்லை. ஜனநாயகம், கடமைனு கருத்து பேசும் கமலும் இதை வலியுறுத்த வேண்டும்.

Advertisement
மேலும் செய்திகள்
hindi-bigg-boss-14-new-strategy
எல்லை மீறும் இந்தி பிக் பாஸ்.. ராக்கி மற்றும் அபிநவ்வின் புதிய நெருக்கம்.. திட்டித்தீர்க்கும் நெட்டிசன்கள்..
aari-updates-in-bigg-boss
பிக் பாஸ் டைட்டில் வின்னருக்கு அடித்த ஆஃபர்.. 105 நாளில் 1 கோடி சம்பளம்.. வாயைப்பிளக்கும் ரசிகர்கள்..
biggboss-season-4-winner-updates
பிக் பாஸ் டைட்டில் வின்னர் யார் தெரியுமா?? இணையதளத்தில் கசிந்த தகவல்..
suresh-chakravarthy-reason-for-not-coming-in-bigg-boss
மொட்டை தாத்தாவை தெரிந்தே ஒதுக்கியதா விஜய் டிவி?? சலசலக்கும் நெட்டிசன்கள்..
what-happened-in-promo3-biggboss
மீண்டும் பிக் பாஸில் அழுகை குரல்.. நடிகை ரேகாவின் உருக்கமான பதிவு.. வெளியான மூன்றாவது ப்ரோமோ..
what-happened-in-bigg-boss-on-98thday
டிக்கட் டூ பினாலே வின்னர் சோமு.. ஆரி சேவ் என அறிவித்த கமல்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
bigg-boss-4-day-93-review
தொடரும் டிக்கட் டூ பைனல் டாஸ்க் - நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது?நாள் 93
what-happened-in-biggboss4-on-92th-day
கடைசி வார நாமினேஷன்.. டிக்கெட் டூ பைனல் டாஸ்க்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
what-happend-in-biggboss-on-91th-day
ஆண்டவர் வருகை.. ஆஜித் வெளியேற்றம்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
bigg-boss-4-day-90-review
ஆண்டவர் வருகை ,பாலா -ஆரி மோதல் - நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது ?நாள் 90
/body>