சம உலகை படைக்க சூப்பர் நடிகர் சபதம்..

by Chandru, Oct 12, 2020, 11:37 AM IST

சூப்பர் ஸ்டார் நடிகர்கள் அமிதாப்பச்சன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜீத், சூர்யா, மகேஷ்பாபு ஆகியோருக்கு பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுத்து வளர்த்துள்ளனர். நேற்று சர்வதேச பெண் குழந்தைகள் தினம். இதையொட்டி நடிகர் மகேஷ்பாபு தனது சமூக வலைத் தள பக்கத்தில் மகள் சித்ராவுக்காகவும், மற்ற எல்லா பெண் குழந்தைகளுக்காகவும் ஒரு மெசேஜ் பகிர்ந்திருக்கிறார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:என் மகளைவிட எனக்கு மிகச் சிறந்த பரிசு எதுவும் கிடையாது. அவர் தனக்கென்று ஒரு சிறிய உலகம் படைக்கிறார். அவருடைய கனவுகள் புறக்கணிக்கப்படக் கூடாது. அதேபோல் பெண் குழந்தைகள் எல்லோருடைய குரல்களும் கேட்கப்பட வேண்டும். உறுதியாக இருங்கள். உங்களுக்கு எது சரியோ அதற்காகப் போராடுங்கள். நாம் இதைச் சம உலகமாக மாற்றச் சபதம் ஏற்போம். என் சிறிய மகளையும் உலகில் உள்ள எல்லா சிறிய பெண் குழந்தைகளையும் கொண்டாடுகிறேன்
இவ்வாறு மகேஷ்பாபு தெரி வித்திருக்கிறார்.

மகேஷ்பாபு தெலுங்கில் முன்னணி நடிகரில் ஒருவர். அவர் நடித்த தெலுங்கு படங்களின் தமிழ் ரிமேக்கில் தளபதி விஜய் நடித்திருக்கிறார். கில்லி, போக்கிரி போன்ற படங்கள் சூப்பர் ஹிட் ஆனது. ஏஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இவர் நடித்த ஸ்பைடர் என்ற படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் நடித்தார் மகேஷ்பாபு. இந்த ஆண்டின் தொடக்கத்தில் மகேஷ்பாபு நடித்த சரிலேறு நீக்கெவரு படம் வெளியானது. தற்போது மேஜர் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

Get your business listed on our directory >>More Cinema News