கொளுத்தி போடுங்க எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு !! கேப்ரியலா குதூகலம் .

Gabriella in BiggBoss 4 house

by Logeswari, Oct 12, 2020, 14:18 PM IST

பிக் பாஸ் சீசன் 4 தொடங்கி ஒரு வாரம் ஆகிவிட்டது. ஆனால் சென்ற வாரம் எதிர்ப்பார்த்த அளவிற்கு சுவாரசியம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஒரே விஷயமான அனிதா சம்பத் மற்றும் மொட்டை சுரேஷுக்கு இடையான சண்டையை ஒரு வாரம் இழுத்து நிகழ்ச்சியை ஓட்டினர். இதனால் ஷிவானி,கேப்ரியலா இன்னும் பல பேர் அவர்களின் அடையாளத்தை பிக் பாஸ் வீட்டில் இன்னும் நிருபிக்கவில்லை.இந்நிலையில் வாரத்தின் இறுதிநாளான சனி மற்றும் ஞாயிறு போன்ற கிழமையில் ஆண்டவர் அருள்தருவார். நடிகர் கமலஹாசன் கடந்த வாரத்தில் நடந்தவை யாவும் ஹவுஸ் மெட்ஸ் எடுத்துரைக்க சில சிலுமிஷ வேலைகளையும் ஆண்டவர் கையாண்டார். அதுவும் பாலாஜி மற்றும் சனம் இருவருக்கும் இடையே நடந்த சண்டையை மறுபடியும் தோண்டி பிரச்சனை மூட்டினார்.

இந்நிலையில் ஆண்டவரால் ஒரு போட்டி நிகழ்த்தப்பட்டது அதில் ஹவுஸ் மெட்ஸை கவர்ந்த இருவருக்கு இதயத்தையும், கவராத இரண்டு பேருக்கு உடைந்த இதயத்தை தர சொன்னார்.இதையடுத்து எல்லா ஹவுஸ் ஹவுஸ் மெட்சும் இதனை செய்தனர். கேப்ரியலா ஹவுஸ் மெட்ஸ் முன்னாடி நின்று மொட்டை சுரேஷ், ஷிவானி, ஆகியவரை அழைத்து மொட்டை சுரேஷிடம் நீங்கள் கோவப்படுறது எனக்கு பிடிக்கும் என்னக்கு மிகவும் பொழுது போக்காக இருக்கு என்று அவரின் இதயத்தை தந்தார். முதல் வாரம் சற்று மோசமாக சென்ற நிலையில் வரும் வாரம் எப்படி இருக்க போது என்பதை காத்திருந்து பார்க்கலாம்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அதிகம் படித்தவை