நீட் தேர்வுக்கு இன்னொரு வாய்ப்பு.. சுப்ரீம் கோர்ட் அனுமதி.

Supreme Court allows NEET exam to be conducted on Oct.14 for students not appeared already.

by எஸ். எம். கணபதி, Oct 12, 2020, 14:01 PM IST

கொரோனா காரணமாக நீட் தேர்வு எழுதாமல் விட்ட மாணவர்கள் வரும் 14ம் தேதி தேர்வு எழுத அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கு நீட் எனப்படும் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, இந்த ஆண்டு தேர்வு தள்ளிப் போடப்பட்டு, கடைசியாக கடந்த செப்டம்பர் 13ம் தேதி நடைபெற்றது. இதில் 14 லட்சத்து 37 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். இதைத் தொடர்ந்து, நீட் தேர்வுக்கான விடைக்குறிப்புகள் சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டன. மாணவர்கள் விடைக்குறிப்புகளை சரி பார்த்து அதில் ஏதேனும் மாறுதல் இருந்தால் தகவல் தெரிவிக்க தேர்வர்களுக்கு தேசிய தேர்வு முகமை அவகாசம் வழங்கியது. நீட் தேர்வு முடிவுகள் அக்டோபர் இன்று பிற்பகல் அல்லது நாளை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களில் நீட் தேர்வு எழுதாமல் விட்ட மாணவ, மாணவியருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு மீது இன்று சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பில், அக்டோபர் 14ம் தேதி நீட் தேர்வு நடத்தி, அக்டோபர் 16ம் தேதி முடிவுகளை வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

You'r reading நீட் தேர்வுக்கு இன்னொரு வாய்ப்பு.. சுப்ரீம் கோர்ட் அனுமதி. Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை