வருங்கால கணவருடன் படு ரொமான்ஸ் காட்டிய சின்னத்திரை சித்ரா!

by Logeswari, Oct 12, 2020, 14:29 PM IST

ஒரு நிகழ்ச்சியில் சித்ரா தனது வருங்கால கணவருடன் ரொமான்ஸ் செய்த வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.

தனியார் தொலைக்காட்சியில் முன்னணி சீரியலாக ஓடி கொண்டு இருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸில் முக்கிய கதாநாயகியாக நடிப்பவர் தான் சித்ரா. இவர் நடிப்பை தவிர பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக இருந்துள்ளார். அதுமட்டும் இல்லாமல் அதிக கமர்சியல் விளம்பரத்திலும் நடித்துள்ளார். தனது சிறு வயதில் இருந்து கிடைத்த வாய்பினை தட்டி கழிக்காமல் சரியான முறையில் பயன்படுத்தியும்,கடுமையாக உழைத்தும் தனி பெண்மணியாக உயர்ந்துள்ளார். இவர் சமூக வலைதளங்களில் அதுவும் இன்ஸ்டாகிராமில் தினமும் புகைப்படம்,வீடியோ என்று பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் இவருக்கு கடந்த மாதம் ஒரு தொழில் அதிபருடன் நிச்சியதார்த்தம் முடிந்தது. இந்த ஆண்டு இறுதிக்குள் இருவருக்கும் திருமணம் என்று செய்திகள் வெளியாகியது. இதை அடுத்து சித்ரா தனது வருங்கால கணவருடன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருவரும் சேர்ந்து இருக்கும் ரொமான்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளார். வீடியோ சமூக வலைத்தளப் பக்கத்தில் பரவி பயங்கர வைரலாகி வருகிறது.

சித்ராவின் ரசிகர்கள் கூடிய சீக்கிரம் கல்யாண சாப்பாடு போடுங்கள் என்று அளவு கடந்த வாழ்த்துக்களை தெறிக்க விட்டு வருகின்றனர்.

Get your business listed on our directory >>More Cinema News