அட என்னடா... காஜலுக்கு வந்த சோதனை !! திருமணத்தில் சிறிய மாற்றம், காரணம் கொரோனாவா ?

by Logeswari, Oct 13, 2020, 12:02 PM IST

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார் காஜல் அகர்வால். இவர் விஷால், தளபதி விஜய் போன்ற முக்கிய நடிகர்களுடன் பல திரைப்படத்தில் கதாநாயகியாக ஒன்று சேர்ந்து நடித்துள்ளார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு காஜல் அகர்வாலுக்கு கல்யாணம் என்று சமூக வலைத்தளங்களில் காட்டு தீ போல் பரவியது.

இதனால் காஜலும் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனக்கு நிச்சியதார்த்தம் முடிந்து விட்டதாகவும் வருகின்ற அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி திருமணம் என்று தெரிவித்ததோடு தனது வருங்கால கணவரின் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். இதையடுத்து இவருக்கு ரசிகர்களிடையே வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இவர் திருமணத்தை முன்னிட்டு தனது தங்கையுடன் பார்ட்டி கொண்டாடினார்.

இவரது திருமணத்தை மும்பையில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் மிகவும் பிரம்மாண்டமாக நடத்த ஏற்பாடு செய்தனர். ஆனால் கொரோனாவின் தாக்கம் குறையாததால் காஜல் வீட்டிலே நெருக்கிய நண்பர்கள், உறவினர்கள் என்று பெரிய அளவில் கூட்டத்தை சேர்க்காமல் எளிமையான முறையில் திருமணம் நடத்த ஏற்பாடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நீண்ட நாள் பிறகு இவரது கல்யாணம் நடக்கும் வேளையில் காஜலுக்கு இப்படி ஒரு சோதனை வந்துள்ளதை குறித்து ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.

Get your business listed on our directory >>More Cinema News