இந்தியாவில் மீ டூ இயக்கம் பிரபலம் ஆன பிறகு சினிமா துறையில் இருந்து பல நடிகள் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகளை தைரியமாக மீடியா முன் கொண்டு வந்தார்கள். அந்த வரிசையில் வைரமுத்து மேல் பல பெண்கள் பாலியல் தொந்தரவு தந்ததாக புகார் தெரிவித்தனர். அப்படிப்பட்ட பெண்களுக்கு சின்மயி தொடர்ந்து ஆதரவு அளித்துவந்தார். சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:-
பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணிபுரியும் பெண் ஒருவரும் வைரமுத்துவால் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகியுள்ளார்.இது நடந்து 2 வருடங்கள் ஆகிவிட்டது. பெயரை வெளியே சொல்ல அந்த பெண் விரும்பவில்லை. அவர் கல்லூரியில் படிக்கும் பொழுது விருந்ததினராக வந்த வைரமுத்துவிடம் ஆட்டோகிராஃப் வாங்க சென்றுள்ளார்.அப்பொழுது அவர் ஆட்டோகிராஃப் தந்ததுடன் தனது போன் எண்ணையும் எழுதி கொடுத்துள்ளார். ஆனால் அதை அவர் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.நாட்கள் செல்ல செல்ல அந்த பெண் தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணிபுரிந்து உள்ளார்.அங்கு நேர்காணலுக்கு வந்த வைரமுத்து அந்த பெண்ணின் தொலைபேசி எண்ணை வாங்கி உள்ளார்.பிறகு தினமும் மவுண்ட் ரோடு அருகே உள்ள இடத்திற்கு வர சொல்லி 50 முதல் 60 முறை போன் செய்து தொல்லை கொடுத்துள்ளார். அதன் பிறகு அந்த பெண் வைரமுத்து மனைவிடமும் மற்றும் தொலைக்காட்சி உரிமையாளர் ஆகியவரிடம் சொன்ன பிறகு தான் வைரமுத்து என்னை தொடர்பு கொள்வதை கைவிட்டார் என்று அந்த பெண் மிக வருத்தத்துடன் தெரிவித்தார். இது போல பல பெண்கள் வைரமுத்துவால் பாதிக்க பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.