வைல்ட் கார்டு என்ட்ரி,சிக்னேச்சர் போஸ் சுரேஷ் - பிக் பாஸில் என்ன நடந்தது ? நாள் 11

Advertisement

வாத்தி ரெய்டு பாடலோட நாள் தொடங்கினாலும். ஆடறதுக்கு தான் யாரும் இல்லை. அப்படியே மெதுவா சோம்பல் முறிச்சு எந்திரிச்சு வந்து ஆடறதுக்குள்ள பாதி பாட்டு முடிஞ்சு போய்ருது. எடிட்டருக்கு வேலை மிச்சம். ஏற்கனவே ஆட்டம் கொண்டாட்டம் டாஸ்க்ல ஆடறதால காலைல டீல்ல விட்டுட்டாங்க போல இருக்கு.

முதல் பாட்டு ரமேஷ் ரேகாவுக்கு. ரமேஷோட பாட்டு தான் போல. அவரும் ஆதம்பத்துல நல்ல ஸ்டெப்பா தான் போட்டாரு. ஆனா அவருக்கு தெரிஞ்சுதே நாலு ஸ்டெப்பு தான், அவரும் என்ன தான் செய்வாரு பாவம். ரேகா மேடம் படத்துல நடிச்சுட்டு இருக்கும் போது இப்படி யாராவது ட்ரெஸ் கொடுத்தீங்களாடா.... படுபாவி பசங்க சார்.... அவங்களும் நாலு நல்ல ஸ்டெப்ஸ் போட்டாங்க.

அடுத்தது சோம் & சாம். வெண்ணிலவே பாட்டு, கிட்டத்தட்ட சம்முவுக்கு அதே மாதிரி ட்ரெஸ். ஆனா டான்ஸ்? நேத்து சொன்னா மாதிரி கேப்பி கீழ நின்னு ஸ்டெப்ஸ் போட்டுச் சொல்லி கொடுத்ததால அந்தப் பாட்டு தப்பிச்சுது. ஏய்யா சோம், பேண்டுக்கு ஜிப்பு போடறதை ஸ்டேஜ்ல வந்து தான் போடுவியா..... யூ.... யூ.... யூ....

அடுத்த பாடல் ஆரிக்கும், ரம்யாவுக்கும். மாமா மாமா பாட்டு. ஆரி ஒரு பக்கம் வெறிபிடிச்ச மாதிரி ஆட, ரம்யா ஒரு பக்கம் அலுங்காம குலுங்காம ஆடிட்டு இருந்தாங்க. ஒரு கட்டத்துல வெறி அதிகமாகி ரம்யாவை குலுக்கி எடுத்துட்டாப்புல. கேரக்டராவே மாறிட்டாராம்.... ம்ம்ம்ம்....

கடைசிப் பாடல் நம்ம ஷிவானிக்கும், பாலாஜிக்கும். இந்த பாலாஜி பய இந்த வீட்டுக்கு வந்ததுல இருந்து ஆர்ம்ஸ் காட்டாம எந்த சட்டையும் போட்டதில்ல. இதிலேயும் அப்படியே... ஷிவானிக்கு ஒரு ட்யூப் டாப். லாங் ஷாட்ல பார்க்கும் போது ரெண்டு பேர் ஆர்ம்ஸும் ஒரே மாதிரி தெரிஞ்சது எனக்கு மட்டும் தானா? ஹிவானி ஒரு வரியைக்கூட மிஸ் பண்ணாம ஆட, பாலாஜி அவன் பாட்டுக்கு ஆடிட்டு இருந்தான். நீ என்னத்தையோ ஆடிட்டு கிடனு ஷிவானி தனி ஆவர்த்தனம்ல கலக்கிடுச்சு. ஷிவானி இருக்க நாம ஏன் பாலாஜியை பார்க்கனும்ங்கறேன். என்ன நாஞ் சொல்றது.....

கிச்சன் க்ளீனிங் டீமை ஆஹா ஓஹோனு பாராட்டிட்டு இருக்கும் போதே, தீமை தான் வெல்லும் தீம் மியூசிக்கோட உள்ள வந்தாங்க அர்ச்சனா. சன் டிவில ஒரு காலத்துல கொடி கட்டி பறந்த ஒரு ஆங்கர். கல்யாணத்துக்கு அப்புறம் பிரேக் எடுத்து வந்த போது, அவங்க எதிர்பார்த்த பிரேக் கிடைக்கல. முதல்ல விஜய் டிவில தான் வந்தாங்க. கலக்கப் போவது யாரு ப்ரோகிராம்ல கிட்டத்தட்ட செட் ப்ராப்பர்டியா பயன்படுத்தினார்கள். விஜய் டிவில வரவங்க எல்லாருமே பகடிக்குள்ளாக்கப் படுவாங்கன்னாலும், அர்ச்சனாவுக்கு அந்த டைம்ல நடந்தது கொஞ்சம் அதிகம்னு தான் தோணுச்சு. கடைசி வரைக்கும் அவங்களுக்கு தனி ப்ரோகிராம் கிடைக்கவே இல்ல.

அதுக்கப்புறம் தான் அங்கிருந்து வெளிய போய் ஜீ டிவிக்கு போனாங்க. அங்க மிக முக்கியமான ப்ரோகிராமான "சரிகமப" ல கலக்கி எடுத்தாங்க. எந்திரன் டைம்ல ரஜினி சார் பேட்டி வரும் போது, அதுல ஆங்கரா இருந்தது அர்ச்சனா தான். ஜீ டிவில அப்படி ஒரு முக்கியமான இடத்துல இருந்தவங்க எப்படி மறுபடியும் விஜய் டிவிக்கு திரும்ப வந்தாங்கனு தான் தெரில. அர்ச்சனாவும் விஜய் டிவி சம்பந்தபட்டவங்க தான் என்பது இங்கு முக்கியமான பாயிண்ட். பொறுத்திருந்து பார்ப்போம்.

அர்ச்சனா பத்தி எல்லாருக்கும் தெரியும். சரவெடி பேச்சுக்கு சொந்தக்காரி. கன்னாபின்னானு கவுண்ட்டர் கொடுக்கக்கூடியவங்க. இந்த சீசன் கண்டஸ்டண்ட்ஸ் பார்த்தோம்னா சினிமால இருந்து வந்தவங்களை விட, டிவி மீடியா, சோஷியல் மீடியா சென்சேஷ்ன்ல வந்தவங்க தான் அதிகம். அதனால அறிமுகத்தைத் தாண்டி சில பேருக்கு இடையில நல்ல பாண்டிங் இருக்கு.

வசந்த முல்லையே வா, வாசக் கருவேப்பிலையே வானு வேல்முருகன் வழக்கம் போலத் துதி பாட, எல்லாருக்கும் ஒரே பாட்டை பாடறாருய்யா.... கட்டிப்பிடி படலம்லாம் முடிஞ்சு வீட்டுக்குள்ள போன உடனே சுரேஷுக்கு திருஷ்டி கழிச்சு, அவரோட சிக்னேச்சர் போஸ் பத்தி சொல்லி வச்சு செஞ்சாங்க. மேம்னு கூப்பிட்ட அனிதாவை அக்கானு கூப்பிட சொன்னாங்க. கூடவே குறுகுறுனு பார்த்ததையும் கலாய்ச்சு விட்டாங்க. வெளிய எவ்வளவு டேமேஜுனு கேக்கவும், ரியோ சொன்ன மாதிரி நீயே திரும்பத் திரும்ப பேசி டேமேஜை ஏத்திக்கற அனிதாகிட்ட சொல்லவும், அனிதாவுக்கு மூஞ்சியே இல்ல. இந்த வீட்டுல ப்ரோமோ பத்தி, தன்னோட இமேஜ் பத்தி அதிகமா கவலைப்படறது அனிதா தான்.

அர்ச்சனாவை வெல்கம் பண்ணின பிக்பாஸ் அவங்களோட டாஸ்க்கை ஆரம்பிக்கச் சொன்னார். இந்த 10 நாள்ல ஹவுஸ்மேட்ஸ் ஒவ்வொரித்தருக்கு வெளிய என்ன பேர் கிடைச்சுருக்கு, அவங்க எப்படி வெளிய போர்ட்ரெயிட் ஆகிருக்காங்கனு புரிய வைக்க எல்லாருக்கும் ஒரு போர்ட் மாட்டி விட்டாங்க அர்ச்சனா.

No comments simply waste
பாலாஜி, ரேகா..

எதுவுமே சொல்றதுகில்லைங்கறது கொஞ்சம் ஹார்ஷ் கமெண்ட் தான். ஆனா வேற வழியில்லை. பாலாஜி உண்மையிலேயே அப்படித்தான் இருக்கான். உண்மை சுடும்ங்கறா மாதிரி இனிமே ஏதாவது சீரியஸா செய்யறானானு பார்ப்போம்.

சவாலான போட்டியாளர்.
ரம்யா, ரியோ

எவிக்‌ஷன் ப்ரீ பாஸ் டாஸ்க்ல ஒரே நாள்ல உச்சத்துக்கு போய்ட்டாங்க ரம்யா. அடுத்து வரும் நாட்களில் அதை எப்படித் தக்க வச்சுக்கப் போறாங்க என்பது தான் சவால். ரியோவை பொறுத்தவரைக்கும் பெருமாள் முகம் காமிச்சுட்டு இருந்தவரு, திடீர்னு தன்னோட சிங்க முகத்தை காமிச்சாரு. சுரேஷ் கிட்டத்தட்ட ஒருவில்லனா போர்ட்ரெயிட் ஆகிருக்கற இந்த நேரத்துல ரியோ ஹீரோ அவதாரம் எடுக்க வாய்ப்பிருக்கானு வெயிட் செஞ்சு பார்ப்போம்.

ஷோகேஸ் பொம்மை.
சோம், சாம்.

ரெண்டு பேரும் ரொம்ப சேஃபா இருக்காங்கனு தான் தோணுது. சோமுக்கு ராப் பாடற திறமை இருக்கு. ரெண்டு நாளைக்கு ஒரு தடவை வீட்டுல நடக்கற விஷயத்தை ரெடி பண்ணி பாடினா கூட லைம்லைட்ல இருக்கலாம். சம்மு பொறுத்தவரைக்கும் அவங்களோட ட்ரூ கலர் இன்னும் வெளிய தெரியல.

அட்மாஸ்பியர் ஆர்டிஸ்ட்
வேல்முருகன், ஷிவானி.

தன்னோட திறமையை யூஸ் பண்ணாம இருக்கற நபர்கள்ல இவரும் ஒன்னு. ஒரே ஒரு நாள் அம்மா பாட்டு பாடினதோட சரி. அதுக்கப்புறம் ஆளையே காணோம். இந்த அவார்டை வாங்கும் போது ஷிவானிக்கு எவ்வளவு கோவம் வருது..... யம்மாடி. ஒரே விஷயத்தை திருப்பி திருப்பி எல்லாரும் சொன்னா கோவம் வருவது இயற்கை தான்.

நமுத்து போன பட்டாசு.
சனம், ஆரி.

சனம் பொறுத்தவரைக்கும் அவங்க ஒரு ஜவ்வு மிட்டாய். ரியோ மாதிரி பாயிண்ட்டா பேசாம எனக்கு எண்டே கிடையாதுடாங்கறா மாதிரி இழுத்துட்டு போய்ட்டே இருக்காங்க. ஆரி என்ன செய்யறான்னு இன்னும் நமக்குக் காட்டவே இல்லை. ஆனா பில்ட் அப் மட்டும் கொடுக்கறாங்க. அவரும் அங்கங்க சீன்ல தெரியறதோட சரி.

காணவில்லை.
ஆஜித், கேப்பி

வேல்முருகன் மாதிரி தான் இவங்க ரெண்டு பேரும். தன்னோட அடையாளம் எதுவோ அதை இவங்களே மறந்துட்டாங்க. ஆஜித் தினமும் நாலு பாட்டுப் பாடலாம். கேப்பி நாலு ஸ்டெப் போடலாம். இவங்களா உக்காந்து புதுசா ஏதாவது ப்ரோகிராம் செய்யலாம். பாலாஜி, ரம்யா, ஷிவானி, ஆஜித், கேப்பி, வேல்முருகன், நிஷா இவங்க எல்லாம் ஒன்னு சேரனும்னு ஒரு ஆசை இருக்கு. சேர்ந்தாங்கன்னா நல்ல எண்டர்டெயின்மெண்ட் கிடைக்கும். பார்க்கலாம்.

ஆமாஞ்சாமி
ரமேஷ், நிஷா

வேற எதுவும் இல்லனு இந்த அவார்டை கொடுத்துட்டாங்க போல. நிஷா இதிலிருந்து சீக்கிரம் வெளிய வந்துருவாங்க. ரமேஷ் மீண்டு வரது தான் கஷ்டம். அவருக்குத் தடை அவரே தான்.

பிக்பாஸ் 4 ட்ரெண்டிங்.
சுரேஷ், அனிதா

தெரிஞ்சோ தெரியாமலோ இவங்க ஆசைப்பட்டது கிடைச்சுருச்சு. ஆனா இது பாசிட்டிவா நெகட்டிவானு அனிதாவுக்கு ஒரு டவுட். பாசிட்டிவா எடுத்துக்கறேன்னு சொன்னாலும் ஒரு குழப்பத்தோட இருந்தா மாதிரி தோணுச்சு. ஒருவேளை உள்ளுர ரசிச்சாலும் வெளிய காட்டாம இருந்தாங்களோனு தோணினதும் உண்மை.

இந்த டாஸ்க் முடிஞ்ச உடனே கொஞ்ச நேரம் எல்லாரும் போர்டை கழுத்துல மாட்டிட்டு சுத்திட்டு இருந்தாங்க.

ஆஜித் துணி துவைக்கப் போகும் போது, எவிக்சன் ப்ரீ பாஸை ஒளிச்சு வச்சுட்டு போக, அதைக் கண்ணாடி வழியா பார்த்த பாலாஜி அதை எடுத்துடறான். அப்புறம் ஆஜித் வந்து பார்த்துத் தேடும் போது இவனும் சேர்ந்து தேடிட்டு இருந்தான். இவனோட எக்ஸ்ட்ரா பர்பாமன்ஸே இவனைக் காட்டி கொடுத்துடுச்சு.

அதுக்கப்புறம் லிவிங் ஏரியால எல்லாரும் உக்காந்திருக்க, ரமேஷும், ஆரியும் அந்த ப்ரீ பாஸை கேக்க, ஆஜித் கொடுக்க மாட்டேங்கறான். உங்கிட்ட இருந்து எடுத்து காட்டட்டுமானு ரமேஷ் சவால் போட்டதோட இல்லாம அதை எடுத்தும் காட்றாரு. ரமேஷும், ஆரியும் தன்கிட்ட விளையாடறதை ஆஜித் ரசிக்கலை. இதை எப்படி எங்க கிட்ட இருந்து வாங்கறேன்னு பார்க்கலாம்னு சொல்லிட்டு இருந்த போதே, கொடுங்க பார்த்துட்டு தரேன்னு சொல்லி வாங்கின நிஷா, அதை ஆஜித் கிட்ட கொடுக்கவும், ஒரு பஞ்சாயத்து ஆரம்பிச்சது.

எல்லாரும் பார்த்துட்டு இருக்கும் போது தான் ரமேஷ் அதை எடுத்தாரு. ஆஜித் கேட்ருந்தா கொஞ்சம் அட்வைஸ் பண்ணிட்டு கொடுத்திருப்பாங்க. ஆனா இதுக்கு ஆஜித் கோபப்பட்டதோட நிக்காம, ஒரு வார்த்தை கூட பேசலை ஆஜித். நிஷா செஞ்சது அதிகபிரசங்கித்தனம்னாலும், அதுக்காக அழ வைக்கிற அளவுக்குப் போனதெல்லாம் டூ மச். மொத்தத்துல இந்த எபிசோட் தேவையில்லாத ஆணி.

ரமேஷ், ஆரிலாம் சுரேஷை எதிர்த்து பேசுவாங்கனு பார்த்தா அங்க சரண்டராகிட்டு, புள்ள பூச்சியை அடிச்சு கெத்து காமிக்கறாங்க. அடுத்த வார நாமினேஷன்ல எவிக்சன் ப்ரீ பாஸ் வச்சுக்க தகுதியில்லாத ஆளுனு ஆஜித் பேரை எல்லாரும் சொல்ல வாய்ப்பிருக்கு.

பார்ப்போம்.

Advertisement
மேலும் செய்திகள்
hindi-bigg-boss-14-new-strategy
எல்லை மீறும் இந்தி பிக் பாஸ்.. ராக்கி மற்றும் அபிநவ்வின் புதிய நெருக்கம்.. திட்டித்தீர்க்கும் நெட்டிசன்கள்..
aari-updates-in-bigg-boss
பிக் பாஸ் டைட்டில் வின்னருக்கு அடித்த ஆஃபர்.. 105 நாளில் 1 கோடி சம்பளம்.. வாயைப்பிளக்கும் ரசிகர்கள்..
biggboss-season-4-winner-updates
பிக் பாஸ் டைட்டில் வின்னர் யார் தெரியுமா?? இணையதளத்தில் கசிந்த தகவல்..
suresh-chakravarthy-reason-for-not-coming-in-bigg-boss
மொட்டை தாத்தாவை தெரிந்தே ஒதுக்கியதா விஜய் டிவி?? சலசலக்கும் நெட்டிசன்கள்..
what-happened-in-promo3-biggboss
மீண்டும் பிக் பாஸில் அழுகை குரல்.. நடிகை ரேகாவின் உருக்கமான பதிவு.. வெளியான மூன்றாவது ப்ரோமோ..
what-happened-in-bigg-boss-on-98thday
டிக்கட் டூ பினாலே வின்னர் சோமு.. ஆரி சேவ் என அறிவித்த கமல்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
bigg-boss-4-day-93-review
தொடரும் டிக்கட் டூ பைனல் டாஸ்க் - நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது?நாள் 93
what-happened-in-biggboss4-on-92th-day
கடைசி வார நாமினேஷன்.. டிக்கெட் டூ பைனல் டாஸ்க்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
what-happend-in-biggboss-on-91th-day
ஆண்டவர் வருகை.. ஆஜித் வெளியேற்றம்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
bigg-boss-4-day-90-review
ஆண்டவர் வருகை ,பாலா -ஆரி மோதல் - நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது ?நாள் 90
/body>