கொங்கு மண்டலத்தில் தொடர்ந்து பரவும் கொரோனா..

Advertisement

கொங்கு மண்டலத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து நீடித்து வருகிறது. கோவை, ஈரோடு மாவட்டங்களில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோருக்குப் பரவி வருகிறது. தமிழகத்தில் கடந்த ஜூலை 22ம் தேதி முதல் தினமும் புதிதாக 5 ஆயிரம் பேருக்குக் குறையாமல் தொற்று கண்டறியப்பட்டு வந்தது. ஆகஸ்ட் இறுதியில் இது 7 ஆயிரத்தைத் தாண்டியது. கடந்த ஒரு வாரமாகப் புதிதாகத் தொற்று பாதிப்பவர்கள் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து, கடந்த அக்.12ம் தேதி முதல் முறையாக 5 ஆயிரத்துக்குக் கீழ் சென்றது. நேற்று 4410 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. மாநிலம் முழுவதும் இது வரை 6 லட்சத்து 74,802 பேருக்குத் தொற்று பாதித்திருக்கிறது.

அதே சமயம், தொற்றில் இருந்து குணம் அடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரோனா மருத்துவமனைகளிலிருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 5055 பேரையும் சேர்த்து, இது வரை 6 லட்சத்து 22,458 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய்ப் பாதிப்பால் நேற்று 49 பேர் பலியானார்கள். மொத்தத்தில் இது வரை 10,472 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 41,872 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் நேற்று புதிதாக 1148 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 255 பேருக்கும், திருவள்ளூர் 192, காஞ்சிபுரம் 112, கோவையில் 395, ஈரோடு 126, திருப்பூர் 146, நாமக்கல் 148, சேலம் 263, கடலூர் 120, வேலூர் மாவட்டத்தில் 114 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. 11 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் நூற்றுக்கும் குறைவானோருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டது.

சென்னையில் இது வரை ஒரு லட்சத்து 86,667 பேருக்கும், செங்கல்பட்டில் 40,416 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 35,545 பேருக்கும் தொற்று பாதித்திருக்கிறது.
மாநிலம் முழுவதும் 86067 பேருக்கு நேற்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. இது வரை மொத்தத்தில் 8 லட்சத்து 42,924 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பரிசோதனைகள் எண்ணிக்கை அதிகரித்த போதிலும், புதிதாகத் தொற்று பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.தற்போது, மகாராஷ்டிரா, கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில்தான் கொரோனா பாதிப்பு இன்னும் அதிகமாகி வருகிறது.

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!

READ MORE ABOUT :

/body>