பிரபல நடிகைக்கு சீக்கிரமே டும் டும்..

Actress Trisha Getting Marriage Soon?

by Chandru, Oct 16, 2020, 15:16 PM IST

கொரோனா வந்தாலும் வந்தது பலருடைய வழக்கமான நடைமுறைகளும்,ஏன் வாழ்க்கையே கூட மாறி விட்டது. நடிகை காஜல் அகர்வால் திருமணம் உறுதியாகி விட்டது. மும்பை தொழில் அதிபரை மணக்கிறார். இது போல் மேலும் சில நடிகைகள் வாழ்க்கையில் வெவ்வேறு மாற்றங்கள் நடந்திருக்கிறது.

நடிகை திரிஷா வாழ்க்கையிலும் கொரோனா காலம் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது திருமணமாக இருக்கும் என்று சிலர் கணிக்கின்றனர்.
கடந்த சில தினங்களாகவே திரிஷா திருமணம் பற்றி இணையதளங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. திரிஷாவும் தெலுங்கு நடிகர் ராணாவும் காதலித்தனர் பின்னர் அது பிரேக்கப்பில் முடிந்தது.

பின்னர் தயாரிப்பாளர் வருண் மணியனுடன் திருமணம் நிச்சயமானது ஆனால் திருமணம் செய்யாமல் விலகினார். இந்த நிலையில் திரிஷா திருமணம் பற்றி பேச்சு மீண்டும் எழுந்துள்ளது இந்த ஆண்டில் அவரது திருமணம் நடக்கும் என்று கூறப்படுகிறது.
திரிஷாவுடன் சிம்பு பெயர் அடிபடுகிறது. கடந்த ஆண்டே இவர்கள் திருமணம் செய்யவிருப்பதாக பேச்சு எழுந்தது அது பிறகு கிசு கிசுவாக மாறியது. கொரோனா ஊரடங்கில் திரிஷா சிம்பு இருவரும் 'கார்த்திக் டயல் செய்த எண் ' என்ற குறும்படத்தில் நடித்தனர். கவுதம் மேனன் இயக்கினார்.

சமீபத்தில் சிம்புவின் தந்தை டி ராஜேந்தர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவரிடம், ' சிம்பு, திரிஷா திருமணம் செய்கிறார்களா? ' என்றதற்குப் பதில் எதுவும் சொல்லாமல் மவுனம் சாதித்தார்.தற்போது சிம்பு டைரக்டர் சுசீந்திரன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். திரிஷா சமூக வலைத்தள பக்கத்தில் தனது செயல் பாடுகளைக் குறைத்து வருகிறார். இது அவரது திருமண ஏற்பாடுக்கான செயல்பாடுகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

More Cinema News

அதிகம் படித்தவை