800 படத்திலிருந்து பிரபல ஹீரோ விலகுவார்? கிரிக்கெட் பாணியில் பார்த்திபன் கணிப்பு

by Chandru, Oct 17, 2020, 13:51 PM IST

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை சரித்திரம் 800 என்ற பெயரில் உருவாகிறது. இதில் முரளிதரன் வேடத்தை விஜய் சேதுபதி ஏற்று நடிக்கிறார். அதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டபோது இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு ஆதரவாகப் பேசியவர் முரளிதரன் எனவே அவரது வாழ்க்கை படத்தில் நடிக்கக்கூடாது என விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு கிளம்பியது. இயக்குனர் பாரதிராஜா, தாமரை உள்ளிட்ட பலர் விஜய் சேதுபதி 800 படத்திலிருந்து விலக வேண்டும் எனக் குரல் கொடுத்துள்ளனர்.

சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவரும் நடிகருமான சரத்குமார், புதுப்புது படைப்புகளைக் கொடுக்க தயாராக உள்ள கலைத்துறையின்‌ ஊக்கத்தைத் தடுக்கின்ற முயற்சி ‌ ஏற்புடையதல்ல என குறிப்பிட்டிருந்தார் . ஆனால் பார்த்திபனோ விஜய் சேதுபதி 800 படத்திலிருந்து விலகுவார் என்று தனது பாணியில் மெசேஜ் வெளியிட்டிருக்கிறார்.
அவரது மெசேஜ் இதுதான்:முத்தையா முரளியின் சூழல் பந்தை,ஒத்தையா எதிர்கொள்ளும் வி(சய) சேதுபதி...எதிர்ப்புகள்-எதிர்பார்ப்புகளாக bounce ஆகிவரும் பந்தினை லாவகமாக அடித்து boundary-யைத் தாண்டி சிக்சராக விளாசி,(அதாகப்பட்டது தமிழ் உணர்வறிந்து கைவிட்டேன் என)ஆடியன்ஸ் மட்டுமில்லாமல் அம்பையர்ஸையும் cheers girls போல ஆடவைத்து ஆரவாரத்துடன் தமிழ்மக்கள் செல்வன்ந்தர் ஆகிவிடும் வியூகமோ?என்பதென் யூகம்!!!(காலங்காத்தால...)நடப்பது நன்மையே.நன்மையே நடக்கும் என நம்புவோம்!!!

இவ்வாறு ரா பார்த்திபன் தெரிவித்திருக்கிறார்.

Get your business listed on our directory >>More Cinema News

அதிகம் படித்தவை