பிரபல நடிகரின் நடிகை மகள் இயக்குனர் ஆனார்.. விஜய் படம் தயாரித்த நிறுவனம் தயாரிக்கிறது.

Advertisement

கோலிவிட்டில் நடிகர்கள் பலர் இயக்குனர்களாக மாறி படங்கள் இயக்கி உள்ளனர். கமல்ஹாசன், அர்ஜூன், சத்யராஜ், பார்த்திபன், சிம்பு, தனுஷ் என இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்லும் ஆனால் நடிகைகள் ஒரு சிலரே இயக்குனர்களாகி இருக்கின்றனர்.நடிகைகள் ஸ்ரீபிரியா, ரேவதி, சுஹாசினி, ரோகிணி போன்றவர்கள் இந்த பட்டியலில் ஏற்கனவே இடம் பிடித்துள்ளனர். தற்போது பிரபல நடிகர் சரத்க்குமார் மகளும் நடிகையுமான வரலட்சுமி சரத்குமார் பெண்கள் இயக்குனர் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார். விஜய் நடித்த போடா போடி, தாரை தப்பட்டை, சர்க்கார், சண்ட கோழி 2, டேனி என பல படங்களில் மாறுபட்ட பாத்திரங்களில் நடித்து வருகிறார் வரலட்சுமி சரத் குமார். அவர் இயக்கும் புதிய படத்துக்கு கண்ணா மூச்சி என பெயரிடப்பட்டிருக்கிறது.

விஜய் நடித்து மாபெரும் வெற்றி பெற்று வசூல் சாதனை புரிந்த படம் " மெர்சல்" இப்படத்தை தனது 100வது படமாக ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் பட நிறுவனம் தயாரித்தது. இந்த நிறுவனம் சார்பில் அதன் உரிமையாளரான என்.இராம சாமி அடுத்து " கண்ணாமூச்சி" என்ற படத்தை தயாரிக்கிறார். இப்படம் மூலம் வரலட்சுமி சரத்குமார் இயக்குனராக அறிமுகமாகிறார். இந்த நிறுவனம் அறிமுகம் செய்யும் முதல் பெண் இயக்குனரும் இவர் தான். சவாலான வேடங்களால் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் வரலட்சுமி. நடிப்பில் தனி முத்திரை பதித்து வரும் இவர் இதுவரை ஏற்று நடிக்காத மாறுபட்ட வேடமேற்று திரைக்கதை அமைத்து தனது முதல் படமாக " கண்ணாமூச்சி" படம் மூலம் இயக்குனர் அவதாரம் எடுக்கிறார்.

வரலட்சுமி இயக்கி நடிக்கும் " கண்ணாமூச்சி" பட தலைப்பை இன்று காலையில் அரசியல், சமூகம், மற்றும் திரை உலகை சார்ந்த பெண் பிரபலங்கள் ஒரே சமயத்தில் வெளியிட்டு சாதனை படைத்தனர். படத் தலைப்பை வெளியிட்ட பெண் பிரபலங்கள் வருமாறு - பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சங்கீதா விஜய், கிருத்திகா உதய்நிதி, ராதிகா சரத்குமார், குஷ்பு சுந்தர், சுகாசினி மணிரத்தினம், ஹேமா ருக்மணி, ரம்யா சுப்ரமணியம், ரேவதி, ஜோதிகா, சமந்தா, திரிஷா, சிம்ரன், சினேகா, தமன்னா, லட்சுமி ராய், ஹன்சிகா, டாப்சி, அபிராமி, சாய் பல்லவி, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ஸ்ருதிஹாசன், அக்ஷராஹாசன், ஐஸ்வர்யா ராஜேஷ், ரகுல் ப்ரீத், கீர்த்தி சுரேஷ், ரெஜினா, காஜல் அகர்வால், மஞ்சிமா மோகன், அதிதிரவிசந்திரன், பாவனா, திவ்யதர்ஷினி (டி.டி.) சோனியா அகர்வால், ரம்யா நம்பீசன், சாயிஷா, அதிதிராவ் ஹைதிரி, ஆர்த்தி ரவி, லட்சுமி மஞ்சு, சுஜாதா, கீதாஞ்சலி, கிக்சோனு, சின்மயி, அப்சரா ரெட்டி, சாரதா ஸ்ரீநாத், பிருந்தா மாஸ்டர், வாசுகி, டைரக்டர் காயத்ரி, ஜோஷ்னா சின்னப்பா, சிபி ஸ்ரீதேவி, ஆகிய ஐம்பது பேர் தான் அவர்கள் இதுவும் ஒரு சாதனைதான்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
/body>