சினிமா தியேட்டர் திறப்பு பற்றி அமைச்சர் புது அறிவிப்பு.. பேய்மாமா பட விழாவில் பரபரப்பு..

TN Cinema Theatre Openining Soon: Minister Kadabur Raj

by Chandru, Oct 19, 2020, 12:26 PM IST

பாக்யா சினிமாஸ் பட நிறுவனம் சார்பில் விக்னேஷ் ஏலப்பன் தயாரிப்பில் ஷக்தி சிதம்பரம் இயக்கியுள்ள படம் பேய்மாமா. யோகிபாபு கதையின் நாயகனாக நடித்துள்ள இப்படம் முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சமுள்ள படமாக உருவாகி இருக்கிறது. நேற்று இப்படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது.

விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு ஆடியோவை வெளியிட்டு பேசியதாவது.. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் அம்மா அவர்களை வணங்குகிறேன். இங்கு பேசியவர்கள் இந்த அரசு சினிமாத்துறைக்கு நிறைய செய்கிறது என்று சொன்னார்கள். என்னை அம்மா நியமித்ததே அதற்காகத் தான். செய்தி விளம்பரத்துறை என்பது பெரிய ஜாம்பவான்கள் வசித்த துறை. நாங்கள் எல்லாம் படம் பார்த்து அரசியலுக்கு வந்தவர்கள். நாங்கள் அரசியல் படித்ததே தியேட்டர்களில் தான். எம்.ஜி.ஆர் இறந்து போவது போல வரும் ஐந்து படங்களைத் தவிர அவரது மற்ற எல்லாப்படங்களையும் 30 தடவைக்கு மேல் பார்த்திருக்கிறேன். ஆக சினிமாவும் தியேட்டர்களும் எங்களுக்கு முக்கியமானது. இந்தக் கொரோனா நிறைய விசயங்களை முடக்கிப் போட்டுள்ளது. கொரோனா கண்ணுக்குத் தெரியாத வைரஸ். அதே போல் பேயும் கண்ணுக்குத் தெரியாது. ஆனால் அந்தப் பேயை பேய்மாமா என்று ரசிக்கிறபடி படமாக எடுத்திருக்கிறார் இயக்குநர் ஷக்தி சிதம்பரம். இந்தப்பேய் மாமா கொரோனாவை விரட்டும் என்று சொல்லியிருக்கிறார். அப்படியென்றால் ரொம்ப சந்தோஷம். உலக அளவில் இந்தப்படத்திற்கு விருது கிடைக்கும்.

பேய் இருக்கா இல்லையா என்று தெரியாது. ஆனாலும் பேய் என்றால் பயம் தான். பேயை சப்ஜெக்டாக வைத்து கொரோனாவை ஒழிப்பேன் என்ற தீம் நல்ல தீம். ஷக்தி சிதம்பரம் நல்ல சாதுர்யமானவர். அவர் எடுத்த நிறைய நல்லபடங்கள் உண்டு. இந்தப்படம் ரொம்ப நல்லா வந்திருப்பதாகச் சொன்னார்கள். என்ன தான் ஓடிடியில் படம் பார்த்தாலும் தியேட்டரில் படம் பார்ப்பது தான் சுகம். வீக் என்ட் என்றாலே தியேட்டர்தான் எண்டெர்டெயின்மெண்ட். அதனால் பெப்சி தலைவர் ஆர்.கே செல்வமணி பயப்பட வேண்டாம். சீரியல் முதற்கொண்டு சினிமா சூட்டிங் வரை எல்லாத்திற்கும் அனுமதி படிப்படியாக கொடுத்தோம். அதேபோல் சினிமா தியேட்டர் திறப்பது பற்றி ஓரிரு நாட்களில் நல்ல முடிவுகளைச் சொல்வோம்.

இந்தப் பேய்மாமா படம் வெளிவரும் போது நிச்சயம் தியேட்டர்களில் கூட்டம் வரும். அதனால் யோகிபாபு ஷக்திசிதம்பரம் படத்தின் தயாரிப்பாளர் யாரும் கவலைப்பட வேண்டாம். கோவா பிலிம் பெஸ்டி வெலில் நமது தமிழ்ப்படங்களும் திரையிடப்படுவதைப் பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கும். நான் வருடம் வருடம் அங்கு போவேன். நம் படங்களுக்கு அங்கு நல்ல மரியாதை இருக்கிறது. பேய்மாமா வித்தியாசமான கதைக்களம் உள்ள படம் என்பதால் இந்தப்படமும் கண்டிப்பாக பெஸ்டிவெலில் பேசப்படும். அதனால் யோகி பாபு இண்டெர்நேஷனல் ஸ்டார் ஆகிடுவார். இந்தப் படம் நல்ல சுவாரசியமா இருக்கும். எல்லாத்துறைகளைப் போல இந்தச் சினிமாத்துறையும் தன்னிறைவு பெற்ற துறையாக விளங்கும். இவ்வாறு அமைச்சர் கம்பூர் ராஜூ பேசினார்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை