செடி புதருக்குள் போஸ் கொடுக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்... வைரலாகும் பூமிகா திரைப்படத்தின் முதல் போஸ்டர்

Boomika movie first poster releases yesterday

Oct 20, 2020, 11:09 AM IST

ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர். இவர் காக்கா முட்டை, கனா, போன்ற திரைப்படத்தில் நடித்து வெற்றி மாலையை சூடியவர். அவருக்கு கதையில் உள்ள கதாபாத்திரத்தின் ஆழத்தை புரிந்து கொண்டு தான் திரைப்படத்தில் நடிக்க முடிவு எடுப்பாராம். மிகவும் சவாலான கதைகளில் நடிக்க மிகவும் விருப்பம் செலுத்த கூடியவர். இவர் சென்னையில் பிறந்து சென்னையிலே வளர்ந்து, தனது கல்லூரி படிப்பை முடித்தவர். தனது சுய உழைப்பால் மட்டுமே திரை உலகில் யாரும் தொட முடியாத தூரத்தில் உள்ளார். இவர் முதலில் சின்னத்திரையில் இருந்து படி படியாக உயர்ந்து தற்பொழுது வெள்ளித்திரையில் முன்னணி கதாநாயகியாக விளங்கி வருகிறார். சில நாள்களுக்கு முன் க பெ ரணசிங்கம் என்ற திரைப்படம் OTT இல் வெளியானது. இப்படத்தில் இடம்பெற்ற இவரது நடிப்பு அனைவராலும் பாராட்ட பெற்று வெற்றிகரமாக ஓடி கொண்டு இருக்கிறது.

இவரது நடிப்பில் அடுத்து வெளியாகயுள்ள பூமிகா திரைப்படத்தின் முதல் போஸ்டரை நேற்று தமன்னா மற்றும் ஜெயம் ரவி ஆகிய இருவரும் சேர்ந்து இணையதளத்தில் வெளியிட்டனர். இது மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று தமிழகம் முழுவதும் பூமிகா திரைப்படத்தின் போஸ்டர் வைரலாகி வருகிறது. இது இவர் நடிக்கும் 25வது திரைப்படம் என்று குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கிவுள்ளார். போஸ்ட்டரை பார்க்கும் பொழுது திகில் மற்றும் மர்மம் ஆகிய இரண்டும் கலந்து இயற்கையின் அழகால் சூழப்பட்டு கம்பிரமாக போஸ் கொடுக்கிறார் ஐஸ்வர்யா. இத்திரைப்படம் OTT இல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை