டிப் டாப் உடையில் போஸ் கொடுக்கும் காமெடி நாயகன்.. இணையத்தளத்தை கலக்கும் போட்டோஷூட்டின் புகைப்படங்கள்..

comedy actor senthil recent photoshoot

by Logeswari, Oct 20, 2020, 12:47 PM IST

சிறு வயதில் தனது தந்தை அடித்து வீட்டை விட்டு துரத்தியதால் கிராமத்தை விட்டு சென்னைக்கு குடிபெயர்ந்தார். பல கஷ்டங்கள், சோகங்கள் ஆகியவை கடந்த அவரது நடிப்பு திறமையின் மேல் நம்பிக்கை வைத்து தமிழ் சீனிமாவில் நுழைந்தார். அவரது காமெடி வசனங்கள் உலகம் முழுவதும் பரவி மக்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர் தான் செந்தில். இவர் கவுண்டமணியுடன் சேர்ந்து பல திரைபடங்களில் காமெடி நடிகராக நடித்துள்ளார். இவரை மையப்படுத்தி தான் இப்பொழுது இருக்கும் காமெடி நடிகர்கள் வளர்ந்து வருகிறார்கள்.

இவரது புகழ் பெற்ற வசனங்கள் இன்றும் பேசப்பட்டு வருகின்றது. முத்து, உள்ளத்தை அள்ளித்தா போன்ற திரைப்படத்தில் காமெடி நடிகராக வலம் வந்துள்ளார். குறைந்தபட்சம் செந்தில் 500க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நீண்ட ஆண்டு இடைவெளிக்கு பின் 2019 ஆம் ஆண்டு சின்னத்திரையில், ராசாத்தி என்ற சீரியலின் மூலமாக மறுபடியும் நடிக்க தொடங்கினார். இந்நிலையில் டிப் டாப்பாக கோர்ட் சட்டை அணிந்து கம்மிரமாக போஸ் கொடுத்து போட்டோஷூட் எடுத்துள்ளார்.

இந்த போட்டோஷூட்டின் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி பயங்கர வைரலாகி வருகிறது. இதை பார்த்த மக்கள் செந்திலா இது? என்று ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அதிகம் படித்தவை